tamilnadu epaper

குளிரான மழை

குளிரான மழை

கார்மேகம் குவியவில்லை;

வானம் 

தூறவில்லை!

மின்னல்

கீறவில்லை;

சாரல் 

தூவவில்லை!

இடியும் முழங்கவில்லை;

எனினும் 

உள்ளம் பொங்கி வழிகிறது!

தேகம் முழுதும் நனைகிறது!

மார்கழியாய் 

உடல் குளிர்கிறது;

காரணம்

புரிந்துக்

கொண்டேன்;


மெல்லமாய் 

சிரித்துக்

கொண்டேன்!

உள்ளத்தில் கள்ளனாய்

புகுந்திருக்கும் 

உன்னால் தான் என்று!!


-ரேணுகா சுந்தரம்