சுமந்திட்டான் பாவம்...
கணக்கற்ற பாரங்களை
கழுதையை விட மேலாய்
பிறந்திட்ட நாள் முதல்!
காலத்தால் சுமந்தான்
கடமையின் பாரத்தை
திருமணத்தால் சுமந்தான்
குடும்பத்தின் பாரத்தை!
தூக்கமின்றி சுமந்தான்
துயரத்தின் பாரத்தை
துணிவுடன் சுமந்தான்
துணி மூட்டை பாரத்தை!
சுமையென சுமந்தான்
சொந்தத்தின் பாரத்தை
சுகமென சுமந்தான்
குழந்தையின் பாரத்தை!
நன்றி கடனாக சுமந்தான்
நல்லோர் பாரத்தை
நம்பிக்கையில் சுமந்தான்
நட்பின் பாரத்தை!
உரிமையில் சுமந்தான்
உறவுகளின் பாரத்தை
ஒவ்வொரு நாளும் சுமந்தான்
உலகில் பல பாரத்தை!
ஆதலால்...
எரித்தே விடுங்கள்
அவன் துவைத்த ஆற்றில்
ஊருக்கெல்லாம் வெளுத்த
சலவைக்காரனை!
-ஜெ.ம.புதுயுகம்
பண்ணந்தூர்