tamilnadu epaper

காதல் தேவதைகளின் கருத்தரங்கம்

காதல் தேவதைகளின் கருத்தரங்கம்

காதல் தேவதைகளின் கருத்தரங்கம் ஒன்று

கற்பனைக் கனவுலகில் நடக்கிறது இன்று வாழ்க்கையை காதலிப்பவர்கள்

நம்பிக்கையுடன் வாருங்கள்!

நட்பை காதலிப்பவர்கள்

நேசத்துடன் வாருங்கள்!

தாய்மையை காதலிப்பவர்கள்

பாசத்துடன் 

வாருங்கள்!

பெண்மையை காதலிப்பவர்கள்

புனிதத்துடன் வாருங்கள்!

உண்மையை காதலிப்பவர்கள்

உரிமையுடன் வாருங்கள்!

கடமையை காதலிப்பவர்கள்

கம்பீரத்துடன் வாருங்கள்!

படிப்பை காதலிப்பவர்கள்

பண்புடனே

வாருங்கள்!

அழகை காதலிப்பவர்கள்

மென்மையுடன் வாருங்கள்!


இன்று நாம் அனைவருமே

நம் காதல் குணங்களை

களிப்புடன் கொண்டாடுவோம்!


பணத்தைக் காதலிப்பவர்களும்

காமத்தைக் காதலிப்பவர்களும்

கண்டிப்பாக தவிர்த்துவிடவும்!

ஏன் என்றால்

காதல் தேவதைகளின் மாநாட்டில் 

காமாசுரனுக்கும் பணவரக்கனுக்கும் 

கால்பதிக்க அனுமதியில்லை!



-ரேணுகாசுந்தரம்