சிந்தனைச் செவிகள் சீராய் திறக்கட்டும்
நிந்தனை செய்வார்
நிர்மூலக் குரல்கேட்க
அகந்தனை ஒதுக்கி அபயக்குரல் கேட்க
ஆள்வோர் செவிகள்
அகலத் திறக்கட்டும்
காதகர் செய்யும்
பாதகச் செயல்கேட்க
சாதகம் செய்யும்
சண்டாளர் அழிய
மேதகு மேலோர்
போர்வை விலகட்டும்
மேதினியில் வாழ்வோர்
மேன்மை பெறட்டும்
சாதனைச் சிங்கங்கள்
சடுதியில் உயர
வேதனைத் திரைகள்
விரைந்து விலகட்டும்
வந்தனை செய்வோர் வாழ்த்தினைக் கேடக
வாளிப்பு மடலும்
வாகாய் திறக்கட்டும்
இணைய இரவுகள் இனிதாய் மலரட்டும்
பிணைய வாழ்வு பீடுபெற
வளரட்டும்
திக்குத் தெரியா காட்டில்
திண்டாடுவோர்
விக்கும் நிலையை விரைந்து விலக்கி
தீராப் பிணியும்
தீதுகளும் அகல
கேளாச் செவிகள்
கேட்க திறக்கட்டும்.
-சிவ.சே. முத்துவிநாயகம்
திருநெல்வேலி