தனிமரம் தோப்பாகுமா.....
தோப்பாகாத தனிமரத்தின்
தனிமையை யாரறிவார்?
காட்டில் உச்சிவெயிலில்
வெப்பத்தில் வெந்து
தனிமையில் தவிக்கும்
தவிப்பை யாரும் கண்டதுண்டோ?
பழங்களையும், விதைகளையும் ருசித்து இளைப்பாறும் பறவைகள்.....
சுடுமணலில் பாதம்
புதைய ஓடிவரும்
ஒருவன்(ள்)......
சுள்ளியாக உடைத்து
சுயநலம் பேணும்
ஒருவன்(ள்)......
தென்றலோடு நிழலும்
தரும் மரத்தின்
மெளனக் கண்ணீர்
தடமின்றி ஓடும்
மழையாக ஆறாக .......
புறத்தோற்றத்தின் ஆணிவேராய் உறையோடிய உணர்வுகள்
செல்லரித்த சோகங்கள் புரியாதிருப்பது புதிதல்ல..,..
உருவத்தை பார்த்து
உணர்வுகளைக் கொல்லும் மனிதர்கள்..
மரங்களுக்கு மட்டுமில்ல
மனங்களுக்கும் பாரம்
தனிமரம் தோப்பாகாது தான், தோப்பாக தனிமரமும் வேண்டுமே
-N PADMAVATHY
Chennai - 80