எடுத்துப் படிக்க
எடுத்தேன் நூலை
முடி(க்க)ய வில்லை
இன்னும் வரிகள்
ஆர்வம் குறையா
ஆயிரம் பொருட்களின்
கோர்வை அங்குண்டு
குறைவில்லை கொஞ்சமும்
சோர்வில்லை கருத்தில்
சுணங்கும் மனதில்லை!
போதிய வெளிச்சம்
இல்லா விடினும்
வேதியல் நிகழ்வுபோல்
வேண்டியே சன்னல்
ஓரம்ஒளி வழிபார்த்து
உன்னிப்பாய் படிக்கச்
சேரும் மகிழ்ச்சி
சிந்தனை செழிக்க!!
-வைரமணி
சென்னை