நவீனயுக நாயக நாயகியரே... பழமையை நாடி கோலிசோடாவை கொண்டாடுகிறீர்... கூழும்..களியும் குடித்தும் சுவைத்தும் குளிர்கிறீர்... 'ஒட்டிக்கோ..கட்டிக்கோ'வேட்டியும். . சுங்குடிச்சேலையும் அணிந்து..சுயப்படம் எடுத்து பகிர்கிறீர்...பரவசம் அடைகிறீர்...லகரச் சம்பளத்தை தியாகம் செய்து...நிகர லாபமில்லா..நஞ்சற்ற விவசாயத்தில் திளைக்கிறீர்..வாழிய உங்கள் தொண்டு.நஞ்சற்ற உணவுப்பண்டம் யாவருக்கும் படைத்தளித்து...மருத்துவமனைகளை இல்லாமல் செய்வீர்..நம்புவோம்...மூலைகளில் முடங்கிக் கிடக்கும் முதியவர்களை விடுவிக்க மறந்தீரே...செலவுக்குபோதுமான காசு கொடுத்தீர்...சொற்களுக்கு சிறிதேனும் காது கொடுத்தீரா..
-க.குமாரகுரு,
மயிலாடுதுறை