அதிகாரம் ஏதுமின்றி
ராணியின் பாதுகாப்பில் வாழ்ந்தாலும்
ஊருக்கு அவர் ராஜா தான்
ராணிகளை இழந்த ராஜாக்கள்
நீண்ட நாள் தாக்குப் பிடிப்பதில்லை
வரும்...ம் ஆனா வராது
என்னத்த கண்ணையா
பீச் குதிரைகள் எவ்வளவு முயன்றாலும்
மூன்று கட்டங்களை தாண்டுவதில்லை
நிறம் மாறாத அமைச்சர்கள்
பக்குவமாய் குறுக்கு சால் ஓட்டி
பிழைத்துக் கொள்வார்கள்
முன்னும் பின்னும் எதிரிகளை தாக்கும்
பலம் மிகுந்த யானைகளுக்கு
குறுக்குவாட்டில் இருக்கும் எதிரிகள்
கண்ணுக்கு தெரிவதில்லை
களத்தில் கடைசி வரை
பின் வாங்க தெரியாமல்
வீரமுடன் போராடி உயிரிழப்பது
எளிமையான சிப்பாய்கள் தான்
சதுரங்கத்தில் மட்டுமல்ல
வாழ்க்கையிலும்
-நாகை பாலா