Breaking News:
tamilnadu epaper

நியாயத்தீர்ப்பு ?

நியாயத்தீர்ப்பு ?

 

 

     கிராம அலுவலர் நாகராஜனை தெரியாதவர்கர்கள் யாரும் இல்லை. அந்த பெல்ரம்பட்டி கிராமத்தை சுற்றி இருக்கும் நான்கு ஐந்து கிராமங்களுக்கு அவர்தான் கிராம அதிகாரி

     இதுவரை எவரிடமும் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கியது கிடையாது நேர்மையானவர் பட்டா சிட்டா வழங்க அவர் கையெழுத்து போடும் பொழுது பணம் வாங்கியதில்லை.

      அவரிடம் யாரும் எளிதாக அணுகலாம் நேர்மையானவர் அவர்களுடன் இருக்கும் உத்தரரி "ஐயா சம்பளம் மட்டும் போதுமா குடும்பம் நடத்த கொஞ்சம் கிம்பளம் வாங்குனா என்ன ஆயிடப்போகுது" என்றான்.

    "சின்னசாமி நேர்மையாய் இருப்பதால் நம்ம மனசாட்சி கூர்மையா இருக்கும் யாருக்கும் எந்த அதிகாரிக்கும் பயப்பட வேண்டியதில்லை. நேர்மையாய் இருப்பது மக்களிடத்திலே நம்மை ஒரு வேல்யூபல் பர்சனாக காட்டுகிறது" 

    "நீங்க சொல்றது கேட்க நல்லா தான் இருக்கு ஐயா ஆனால் நடைமுறையில்"

    "நடைமுறையில் ஒன்பது பேர் தவறு செய்கிறார்கள் என்பதற்காக நானும் செய்ய வேண்டும் என்பது சரியில்லை சின்னசாமி"

     "ஐயா பிள்ளைங்கள படிக்க வைக்க பள்ளிக்கூடத்தில் அந்த பீஸ் இந்த பீஸ்னு ஆயிரக்கணக்கில் கேக்குறாங்க வர்ற சம்பளம் வயத்துக்கும் வாய்க்கும் சரியா இருக்கு அதனாலதான்"

    'சின்னசாமி நாம என்ன விதைக்கிறோமோ அதை தான் அறுவடை செய்வோம் நல்லதுக்கு காலமில்லை அப்படின்னு சொல்றவங்க வார்த்தையை நம்பாதே நீ நல்லவனா இரு உண்மையா இரு மக்கள் உன்னை நேசிப்பார்கள் லஞ்சம் என்பது பாவப்பட்ட பணம் அது சாப பணம் அதிலிருந்து நமக்கு விமோசனம் கிடையாது"

    மூச்சு விடாமல் தொடர்ந்தார்

    "லஞ்சம் வாங்குகிறவன் மற்றவர்களுக்கு பயப்பட வேண்டியவன், வேலையை காத்துக் கொள்ள பொய்களை பேச வேண்டியவன் கையும் களவுமாய் பிடிக்கப்பட்டால் சமுதாயத்தில் அவனுக்கு இருக்கும் அந்தஸ்து போய்விடும் இப்படி எல்லாம் நம் வாழ்க்கையை சீரழிக்கும் லஞ்சப் பணம் நமக்கு அவசியமா"

   "நீங்க சொல்றது நல்லா இருக்கு ஐயா" 

   "நான் சொல்வது நிஜம் எத்தனையோ பேர் கையும் களவுமாய் பிடிக்கப்பட்டு மக்களால் வெறுக்கப்பட்டு அவர்கள் லஞ்சமாய் வாங்கிய பணம் எல்லாம் ஓட்டை பையில் போட்ட செல்லா காசாய் மாறிப் போய் விரக்தியில் வயோதிக வாழ்வை கழித்துக் கொண்டிருக்கிறார்கள்"

    "ஐயா பணக்காரர்களுக்கு அப்படி ஆகலாம் தேவையுள்ளவர்களுக்கு" 

   "பாரபட்சம் இல்ல சின்னசாமி நம்ம அலுவலகத்தில் காந்தி படம், அப்துல் கலாம் படம் எல்லாம் மாட்டி வைத்திருக்கிறோம் அவர்களை நினைத்துப் பார் அவர்கள் மீது தனி மதிப்பும், மரியாதையும் நமக்கு உண்டாகிறது .அவர்கள் தங்கள் வாழ்க்கையை எளிமையாய் வாழ்ந்து நமக்கு வழிகாட்டியாய் இருந்து போனார்கள் ஆடம்பர வாழ்க்கை அவர்கள் நடத்தவில்லை மக்கள் மீது அன்பு மிகுந்த மனிதாபிமானம் உள்ள இரக்கமுள்ள எளிமையான வாழ்க்கை நடத்தினார்கள் நாமும் சிக்கனமாய் இருப்போம் சிறந்தவர்களாக இருப்போம்" என்றார்

      அவருடைய பேச்சை கேட்ட உத்தாரி மக்களிடம் லஞ்ச பணம் வாங்குவது தவறு என உணர்த்தப்பட்டான் 

    அந்த பெல்ரம்பட்டியில் இருந்த தர்மகர்த்தா கோயில் நிலத்தை தன் வசப்படுத்திக் கொள்ள முனுசீப்பிடம் லஞ்சம் கொடுக்க முன் வந்தார்.

     "வேண்டாம் இது தெய்வ காரியம் உண்மையா இருங்க மத்தவங்களுக்கு முன்மாதிரியா இருங்க "

    "உன் உபதேசம் எல்லாம் எனக்கு வேண்டாம் உன்னால் எனக்கு உதவி செய்ய முடியுமா முடியாதா உன்ன வேலை விட்டு தூக்க என்னால் முடியும்" என 

தர்மகர்த்தா மிரட்டினார்.

    "சம்பளம் நீங்க கொடுக்கிறது இல்ல கவர்மெண்ட் கொடுக்குது என்ன மிரட்டி பார்க்கிறாங்களா என்ன ஒன்னும் செய்ய முடியாது" 

    "இது எங்க ஊர் இங்க நான் வெச்சது தான் சட்டம் என்னைய மீறி உன்னால ஒன்னும் செய்ய முடியாது" 

   "நான் வாங்குற சம்பளத்துக்கு உண்மையா இருக்க விரும்புகிறேன் உன்னால் என் உள்ளத்தை பாவக் கறை படுத்த முடியாது"

   அந்த ஊர் தர்மகத்தா கோபமூர்க்கம் கொண்டார் அந்த அலுவலகத்தை விட்டு வேகமாய் கடந்து சென்றார்.

     இந்த முனிசீப்பை நாலு ரவுடி பசங்கள வைத்து மிரட்டி கோயில் நிலத்தில் கொஞ்ச நிலத்தை தனதாக்கி கொள்ள வேண்டும் என முடிவெடுத்து தனது பண்ணை வீட்டை நோக்கி சென்றார்.

    அங்கே ஜனக்கூட்டம் "குய்யோ முய்யோ" எனக் கத்திக் கொண்டிருந்தது யாருக்கு என்னாச்சு ஏன் இங்கே இத்தனை ஜனங்கள் கூடியிருக்கிறார்கள் என அவன் மனம் பதைத்தது.

    தர்மகர்த்தாவின் பண்ணை ஆள் ஒருவன் "ஐயா நம்ம பையன் தவறிட்டான்" என கத்திக் கொண்டு தர்மகர்த்தாவிடம் ஓடோடி வந்தான்.

    ஒரு நிமிடம் அப்படியே தர்மகர்த்தாவின் இருதயம் நின்று போனதைப் போல் உணர்ந்தார் "ஐயோ என் ஒரே ஒரு மகன் செல்ல மகன் என்ன ஆயிற்று" கத்தி கதறி அவனிடம் வந்தார்.  

    இது எப்படி ஆயிற்று என அங்கே ஒருவருக்கொருவர் விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.

    அங்கிருந்த ஒருவர் தம்பி நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்ச மோட்டார் போட போனார் அங்க தொடக்கூடாது ஏதோ ஒரு ஒயரை தொட்டுட்டாரு மின் கசிவு ஏற்பட்டு எந்த சத்தமும் இல்லாமல் தூக்கி வீசப்பட்டு மோட்டார் அறையிலே இறந்து போயிட்டார்" என்றார்கள்.

      தர்மகர்த்தாவின் காது பட "தெய்வ காரியத்தை வருஷ வருஷம் முன்னாடி நின்று செய்யற தர்மகர்த்தாவுக்கா கடவுள் இப்படி சோதனையை ஏற்படுத்துவது கடவுளே உனக்கு கண் இல்லையா" என்றார்.

     அங்கே கோயில்களில் இருக்கும் எந்த கடவுளும் அதற்கு பதில் அளிக்கவில்லை.

    கேள்விபட்ட கிராம அதிகாரி வருத்தப்பட்டார் நியாயம் தீர்கவில்லை.

     தர்மகர்த்தா தினமும் "சாமி இந்த பாவிய எடுத்துட்டு என் மகன உயிரோட வச்சிருக்கலாமே" என அழுது புலம்பினான்.

    அவனை பார்த்து "நம்ம புள்ள சாமிகிட்ட போயிடுச்சு அது சாமி புள்ள" என்றாள்.

 

-கவிமுகில் சுரேஷ்

தருமபுரி