tamilnadu epaper

பனைகளின் மரணங்களை செய்வதாரோ?...

பனைகளின்   மரணங்களை செய்வதாரோ?...


உயிரோடு

தீயிட்டு கொளுத்துவது

இப்போதெல்லாம்

இயல்பாகிவிட்டது.


மனிதத்தை

காலுக்கு அடியில் போட்டு

மிதிக்கின்றனர்.


தாவரங்கள் பேசுவதை

உற்று நோக்குங்கள்.

கற்றுக் கொடுப்பதை

கவனியுங்கள்.


அவற்றுடன்

பழகிப் பாருங்கள்

பொழுதுகள்

போவதே தெரிவதில்லை

காத்திருப்போம், விடியலுக்காக...


பனையை

நடவு செய்யாமல்

முழுமை பெறாது

விவசாயம்.


அன்றோ

வெள்ளையர்களால்

திட்டமிட்டபடி

நடத்தப்பட்டது

பஞ்சாப் படுகொலை.


இன்றோ

கொள்ளையர்களால்

திட்டமிட்டு

நடத்தப்படுகிறது

பனை குடும்பங்களை

உயிரோடு எரிக்கப்படுகின்றன.

அழிக்கப்படுகிறது...


நாசக்கார கும்பலால்

மோசம் போகும்

பாசக்கார பனைகள்

பலன்களை தந்து விட்டு

பரிதாபமாக

மரணிக்கின்றன......



-எறும்பூர் கை. செல்வகுமார்,

 செய்யாறு.