tamilnadu epaper

பரிசு

பரிசு

 

     " ராஜா மதுமிதாவிற்கு ஒரே மகன் சரவணன் . மிக ஏழ்மையான குடும்பம் . குடிசை வீடு .

 

       " சரவணனுக்கு ஆன் லைன் வகுப்பு தினமும் காலையில் ஒன்பது மணி முதல் பத்து மணி வரை ஊரடங்கு காரணத்தால் .

 

     ஆன்ட்ராய்டு செல்போன் இல்லாததால் நண்பன் ராஜா வீட்டிற்கு சென்று ஆன்லைன் வகுப்பு படித்தான் சரவணன்.

 

     எப்படியாவது தன் படிப்பிற்காக ஒரு செல்போன் வாங்க துடித்தான் சரவணன் .

 

    களத்தில் இறங்கினான் , ஒரு மேஸ்திரியிடம் சித்தாள் வேலைக்கு சென்றான் .

 

    தினமும் வேலைக்கு தாமதமாக போவான் சரவணன் .எதாவது ஒரு காரணம் சொல்லி சமாளிப்பான் சரவணன் .

 

        " பத்து பதினைஞ்சு நாள் சென்ற பிறகு மேஸ்திரி கண்டித்த போது ஆன் லைன் வகுப்பு முடித்து விட்டு வருவதையும் செல்போன் இல்லாததையும் விளக்கி சொன்னான் சரவணன் . 

 

      அன்று மாலை நல்ல தரமான செல்போன் ஒன்று வாங்கி அதை சரவணன் வீட்டில் வந்து கொடுத்தார் மேஸ்திரி .

 

       சரவணனிடம் மேஸ்திரி மேலும் சொன்னார் , நான் படிக்காத கை நாட்டு தம்பி நீ படிக்கனும்ன்னு ஆசைப் படறே அதுக்கு தான் இந்த செல்போன் பரிசு என்றார்.

 

      லீவு முடியற வரைக்கும் வேலைக்கு உன் ஆன் லைன் வகுப்பை முடிச்சுட்டுவா என்றார் மேஸ்திரி .

 

      கண்ணீர் மட்டுமே பதிலாக

கடவுள் நேரில் வந்தது போல் கை கூப்பி வணங்கி நின்றான் சரவணன் பேச்சும் எழாமல் ...."

 

- சீர்காழி .ஆர். சீதாராமன் .

   9842371679 .