tamilnadu epaper

பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்துக்கு பின் காஷ்மீருக்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்க சிறப்பு திட்டம்: உமர் அப்துல்லா

பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்துக்கு பின் காஷ்மீருக்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்க சிறப்பு திட்டம்: உமர் அப்துல்லா

புதுடெல்லி:

​காஷ்மீரின் பஹல்​காமில் கடந்த ஏப்​ரல் 22-ம் தேதி தீவிர​வா​தி​கள் தாக்​குதலில் 26 சுற்​றுலா பயணி​கள் உயி​ரிழந்​தனர், இது காஷ்மீரின் சுற்​றுலா துறைக்கு மிகப் பெரிய இழப்பை ஏற்​படுத்​தி​யது. அதன்​பின் காஷ்மீர் செல்ல வேண்​டாம் என்று அமெரிக்கா உட்பட சில நாடு​கள் தங்​கள் நாட்டு மக்​களுக்கு அறி​வுறுத்​தி​யது.


இதனால் பெரும்​பாலான உணவு மற்​றும் தங்​கும் விடு​தி​கள், விருந்​தினர் மாளி​கைகள் மற்​றும் படகு வீடு​கள் காலி​யாகி​விட்​டன. அனைத்து வகை தங்​கும் விடு​தி​களில் சுமார் 12 லட்​சம் முன்​ப​திவு​கள் ரத்து செய்​யப்​பட்​டன.



அதன்​பின் இந்​தியா - பாகிஸ்​தான் மோதல் பதற்​றத்தை மேலும் அதி​கரித்​தது. எனினும் போர் நிறுத்​தம் அறிவிக்​கப்​பட்டு காஷ்மீரில் விமானப் போக்​கு​வரத்து மீண்​டும் தொடங்​கப்​பட்​டுள்​ளது. இதனால் ஜம்மு காஷ்மீர் மக்​கள், சுற்​றுலா துறை​யுடன் தொடர்​புடைய​வர்​கள் நிம்​மதி பெரு​மூச்சு விட தொடங்​கி​யுள்​ளர். தற்​போது பதற்​றம் தணிந்​துள்​ள​தால் சுற்​றுலா பயணி​கள் மீண்​டும் காஷ்மீருக்கு அதிக எண்​ணிக்​கை​யில் வரு​வார்​கள் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.


இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் ஜம்மு காஷ்மீர் ஓட்​டல் உரிமை​யாளர்​கள் சங்க தலை​வர் முஷ்​தாக் அகமது சாயா கூறும்​போது, “வரும் நாட்​களில் சுற்​றுலா பயணி​கள் கணிச​மான எண்​ணிக்​கை​யில் வரு​வார்​கள். நாடு முழு​வதும் உள்ள பல சுற்​றுலா நிறு​வனங்​கள் ஏற்​கெனவே எங்​களு​டன் தொடர்​பில் உள்​ளனர்.


இவர்​கள் மீண்​டும் புதிய முன்​ப​திவு​களை செய்ய தொடங்கி விட்​டனர். காஷ்மீரில் சுற்​றுலா நடவடிக்​கைகள் படிப்​படி​யாக இயல்பு நிலைக்​குத் திரும்​பும். சுற்​றுலா பயணி​களை வரவேற்க நாங்​கள் தயா​ராக உள்​ளோம். வரும் நாட்​களில் சுற்​றுலா பயணி​களுக்கு சிறப்பு தள்​ளு​படிகளை வழங்​கு​வோம், இதற்​கான ஒரு சிறப்பு திட்​டத்தை முதல்​வர் உமர் அப்​துல்லா அறிவிக்க உள்​ளார்” என்​றார்.


இதற்​கிடை​யில், காஷ்மீரில் வர்த்​தகம் மற்​றும் தொழில் துறை சபை சார்​பில் தொழில் துறை பங்​கு​தா​ரர்​களின் அவசர கூட்​டம் நகரில் நடை​பெற்​றது. இதுகுறித்து தொழில் துறை சபை​யின் ஜம்மு காஷ்மீர் மாநில தலை​வர் தாரிக் கனி கூறும்​போது, “சு​மார் 20 லட்​சம் பேர் இந்த தொழிலுடன் நேரடி​யாகவோ அல்​லது மறை​முக​மாகவோ இணைந்​துள்​ளனர்.


எனவே, சுற்​றுலா துறையை மீட்​டெடுக்க சுற்​றுலா மற்​றும் பயண முகவர்​கள் மற்​றும் பிற தொடர்​புடைய துறை​களு​டன் இணைந்து புதிய உத்​தி​களை உரு​வாக்கி வரு​கிறோம். வரும் நாட்​களில் அடுத்த கட்ட நடவடிக்​கைகள் குறித்து வி​வா​திக்க பிரதமர் மோடி மற்​றும் உள்​துறை அமைச்​சர்​ அமித்​ ஷாவை​யும்​ சந்​திப்​போம்​” என்​றார்​.