கத்தரிக்காயா இது....ஒரே பூச்சியா இருக்கு... பார்த்து வாங்க மாட்டிங்களா?
ஏங்க... வெங்காயம் எப்படி இருக்கு பாருங்க..... கொஞ்சம் கூட உங்களுக்கு பொறுப்பேயில்லை! காசு கொடுத்துதானே வாங்குறீங்க....இரண்டே நாள்ல இந்த வெங்காயம் வீணா போயிடும் போல இருக்கு....!
எந்த கடையில வாங்குனீங்க.... இந்த அழுகிப்போன ஆப்பிளை! திரும்ப கொண்டி கொடுத்துட்டு வாங்க! ஆப்பிளும் வேணாம்!
ஒன்னும் வேணாம்....
கோமதி...என்ன பேசற நீ....! எது வாங்கிட்டு வந்தாலும் அதுல குறைகண்டு புடிச்சிகிட்டு உட்கார்ந்திருக்க! இனிம மார்கெட் போறப்ப.... நீயும் கூட வந்துடு.... உனக்கு புடிச்ச மாதிரி காய்கறியும் பழத்தையும் வாங்கிகிட்டு வந்துடலாம்....வீட்டுக்குள்ளேயே இருந்து கிட்டு இப்படி குறை சொல்றதே உனக்கு வேலையா போயிடுச்சு!
வெளியில வந்து பாரு.... அப்பத்தான் உனக்கு நல்லது கெட்டது எல்லாம் தெரியும்!
அப்படியெல்லாம் கிளம்பி வந்துட முடியாது..வீட்டு வேலையெல்லாம் யார் செய்யறது? போய் உங்க வேலையை பாருங்க!
என்று அலுத்துக் கொண்டாள் கோமதி...
தன் கணவர் ஏகாம்பரம் எந்த பொருள் வாங்கி வந்தாலும், பார்த்து வாங்கக்கூடாதா! என்று கேலியும் கிண்டலும் செய்து குறை கூறிக் கொண்டே யிருப்பாள் கோமதி....
மனைவி கோமதி எவ்விதமாக குறை கூறி வந்தாலும் ஏகாம்பரம் அதற்காக ஒரு நாளும் வருத்தப்பட்டதேயில்லை.
மாறாக எங்கப்பா அவசரப்படாம கொஞ்சம் நிதானமா பார்த்து எனக்கு கல்யாணம் பண்ணியிருந்தா நான் ஏன் உன் கிட்ட வந்து இவ்வளவு சிரமப்பட்டு கிட்டு இருக்கேன் ... என்று மனதுக்குள் நினைத்துக் கொள்வார்?
++++++++++++
நன்னிலம் இளங்கோவன்,
மயிலாடுதுறை.