ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பின் கஸ்ஸாம் படைப்பிரிவின் தளபதி அய்சர் அல்-சாதியை படுகொலை செய்துள்ளது. தேடுதல் வேட்டை என்ற பெயரில் ஜெனினின் அகதிகள் முகாமின் கிழக்குப் பகுதியில் உள்ள பல குடியிருப்பு கட்டடங்களைச் சுற்றி வளைத்த ராணுவம் இவரையும் மற்றொரு பாலஸ்தீன இளைஞரையும் படுகொலை செய்துள்ளது. இந்த கொலை அங்கு வன்முறையை உருவாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.