tamilnadu epaper

பாவம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

பாவம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

6 முறை ஒருநாள் உலகக் கோப்பை, ஒரு முறை டி-20 உல கக்கோப்பை, 2 முறை மினி உல கக்கோப்பை வென்று கிரிக்கெட் உலகில், அதிகளவில் உலகக்கோப்பை யை கைப்பற்றிய நாடு என்ற சாதனையை நீண்ட காலமாக தன்வசம் வைத்துள்ள ஆஸ்திரேலியா அணி, 9ஆவது சீசன் மினி உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் படு தோல்வி அடைந்து வெளியேறியது. ஆஸ்திரேலிய அணியின் இந்த தோல்விக்கு அந்த அணி ஆட்டத்திறன் ஒரு காரணம் என்பதை விட, மற்றொரு காரணம் நட்சத்திர பந்துவீச்சாளர்கள் இல்லாமல் அந்த அணி களமிறங்கி யது தான் மிக மிக முக்கிய மான காரணமாக அமைந்தது. பேட்டிங்கில் மிக பலமாக களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஜூனி யர் பந்துவீச்சாளர்களுடன் (ஆடம் ஜம்பாவை தவிர) களமிறங்கியது. அதா வது ஸ்டார்க், கம்மின்ஸ், மிட்சல் மார்ஷ் (ஆல்ரவுண்டர்), ஸ்டோய்னிஸ், ஹாசில்வுட் உள்ளிட்ட முக்கிய நட்சத்திர வீரர்கள் வெளிப்படையாக எவ்வித காரணத்தையும் கூறாமல் மினி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்காமல் விலகினர். இதனால் ஆஸ்திரேலிய அணி துவார்ஷூயிஸ், நாதன் எல்லிஸ், கூப்பர், ஆடம் ஜம்பா உள்ளிட்ட வீரர்களின் பந்துவீச்சை வைத்து மட்டுமே சமாளித்தது. காப்பாற்றிய மழை முதல் லீக் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்திய ஆஸ்திரேலியா, கடைசி 2 லீக் ஆட்டங்களில் மழை காரணமாக விளையாடாமலேயே அதிர்ஷ்ட வாய்ப்புடன் அரையிறுதிக்கு முன்னேறியது. மழை இல்லாவிட்டால் ஆஸ்திரேலிய அணியின் நிலைமை மோசமாகி இருக்கும். லீக் போட்டி யில் வெளியேறும் நிலை கூட ஏற்பட்டு இருக்கலாம். ஆனாலும் அரையிறுதி யில் அசூர பலத்தில் களமிறங்கிய இந்திய அணியை ஆஸ்திரேலியா வால் சமாளிக்க முடியவில்லை. வெறுங்கை யோடு வெளியேறியது ஆஸ்திரேலியா. ஸ்டார்க், கம்மின்ஸ், மிட்சல் மார்ஷ் (ஆல்ரவுண்டர்), ஸ்டோய்னிஸ், ஹாசில் வுட் ஆகியோருடன் ஆஸ்திரேலியா களமிறங்கி இருந்தால் கண்டிப்பாக கோப்பையை வெல்லும் அளவிற்கு முன் னேறி இருக்கும். ஆனால் முக்கிய வீரர்கள் விலகலால் தான் ஆஸ்திரே லியா அரையிறுதியுடன் வெளியேறி யது என்பது குறிப்பிடத்தக்கது.