பிராக்:
செக் குடியரசின் பிராக் நகரில் நடைபெற்று வரும் பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 4-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார். பிராகில் நேற்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டத்தில் பிரக்ஞானந்தாவும், ஜெர்மனியின் வின்சென்ட் கீமரும் மோதினர். இதில் அபாரமாக விளையாடிய பிரக்ஞானந்தா 44-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதையடுத்து முழு புள்ளியைப் பெற்ற பிரக்ஞானந்தா மொத்தம் 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான அரவிந்த் சிதம்பரம் இந்தச் சுற்றில் அமெரிக்காவின் சாம் ஷங்க்லாண்டுடன் டிரா செய்தார். அவரும் மொத்தம் 3 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பிரக்ஞானந்தாவுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், வியட்நாமின் குவாங் லீம் லீ, நெதர்லாந்தின் அனிஷ் கிரி ஆகியோர் தலா 2 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளனர்