புதுச்சேரி ஏப்-4
புதுச்சேரி அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நேத்தாஜிநகரில் அமைந்துள்ள ஸ்ரீ தேசமுத்துமாரியம்மன் ஆலயம் கோயிலுக்கு ஒரு கால பூஜைக்காக 20,000 (இருபதாயிரம்) ரூபாய் காசேலையை உப்பளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கோயில் அறங்காவல் நிர்வாகிகள் மற்றும் உப்பளம் தொகுதி துணை செயலாளர் ராஜி, கிளை செயலாளர்கள் சந்துரு, இருதயராஜ், முரளி, ராகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.