Breaking News:
tamilnadu epaper

புயல் எச்சரிக்கை கூண்டு

புயல் எச்சரிக்கை கூண்டு

இந்த புயல் எச்சரிக்கை கூண்டு என்பது புயலின் தீவிரத்தை உணர்த்த ஏற்றப்படுகிறது.

இதில் மொத்தம் 11 படிநிலையிலான கூண்டுகள் ஏற்றப்படும்.

பகல் நேரங்களில் மூங்கில் தட்டைகளால் ஆன கூண்டுகள் ஏற்றுவர்.

இரவு நேரங்களில் வண்ண ஒளி விளக்குகளால் ஆன புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றுவார்கள்.

இந்த அனைத்தையும் பற்றிக் காண்போம்.

கூண்டு எண் 1

புயல் உருவாகக் கூடிய வானிலை சூழல் ஏற்பட்டுள்ளது என்பது பொருள்.

துறைமுகங்கள் பாதிக்கப்படாமல், பலமாக காற்று வீசும்.

கூண்டு எண் 2

இது புயல் உருவாகி உள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது.

இந்த எச்சரிக்கையை கண்டால் துறைமுகத்தை விட்டு கப்பல்கள் வெளியேற்றப்பட வேண்டும்.

கூண்டு எண் 3

திடீர் காற்றோடு மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன.

கூண்டு எண் 4

துறைமுகத்தில் உள்ள கப்பல்களுக்கு ஆபத்து நேர வாய்ப்பு உண்டு.

கூண்டு எண் 5

புயல் உருவாகி உள்ளது.

துறைமுகத்தின் இடதுபுறம் கரையைக் கடக்கும்.

கூண்டு எண் 6

புயல் வலதுபுறமாக கரையைக் கடக்கும் போது துறைமுகம் கடுமையான வானிலைக்கு உள்ளாகும்.

கூண்டு எண் 7

துறைமுகம் வழியாகவோ அல்லது அருகிலோ புயல் கரையைக் கடக்கலாம் என்பதற்கான எச்சரிக்கை

கூண்டு எண் 8

இது மிகுந்த அபாயம் என்பதை குறிக்கும். அதாவது புயல், தீவிர புயலாகவோ, அதிதீவிர புயலாகவோ உருவெடுத்து, துறைமுகத்தின் இடதுபக்கமாக கரையைக் கடக்கும்.

கூண்டு எண் 9

புயல் தீவிர புயலாகவோ அல்லது அதிதீவிர புயலாகவோ உருவெடுத்துள்ளது என்று பொருள்

கூண்டு எண் 10

அதி தீவிர புயல் உருவாகியுள்ளது என்றும், அது துறைமுகம் அருகே கடந்து செல்லும் பெரும் அபாயம் ஏற்பட்டுள்ளது

கூண்டு எண் 11

இது வானிலை மையத்துடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கும்