tamilnadu epaper

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்)-14.05.25

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்)-14.05.25

வாசகர் கடிதம் பகுதி


 அன்புடையீர், வணக்கம்.14.5..25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பரில் முதல் பக்கத்தில் மீண்டும் பயங்கரவாத ஆதரவு எடுத்தால் பதிலடி கடுமையானதாக இருக்கும் என்று நம் பிரதமர் மோடி ஜி யின் பேச்சு மிகவும் அருமையான முடிவு என்று பாராட்ட வைத்தது. இன்றைய பஞ்சாங்கம் மிக அருமையான நாளாக எனக்கு அமைந்தது.


திருக்குறள் மிகவும் அருமை. பொருளுடன் ரசித்து படித்து மகிழ்ந்தேன். தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த தமிழக கேரள பக்தர்கள் என்ற செய்தி ஆன்மீக தகவலாக மிக மகிழ்ச்சியுடன் பார்க்க வைத்தது. சித்ரா பௌர்ணமி சத்ய நாராயணா பூஜை மன நிறைவை தந்தது.


நலம் தரும் மருத்துவம் பகுதி வந்த குழந்தை குண்டாக இருக்கிறதா என்று எச்சரிக்கும் மருத்துவர்கள் பற்றிய செய்தி மிக மிக பயனுள்ள தகவல்.


தி. நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் ஜவுளி கடையில் திடீர் தீ விபத்து ஊழியர்கள் அலறி எடுத்துக் கொண்டு வெளியேறிய பரபரப்பான செய்தியை படித்து அதிர்ச்சியாக இருந்தது .சாதியை காரணம் காட்டி கோவில் திருவிழாவுக்கு நன்கொடை பெற மறுப்பது தீண்டாமை மறுபடியும் என்ற நீதிபதி அவர்கள் சொன்னது உண்மை.


தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் வசுமதி ராமசாமி அவர்கள் பற்றிய தகவல் மிகவும் அருமை. படிக்கும் போது மன மகிழ்ச்சியாக இருந்தது. பல்சுவைக் களஞ்சியம் பகுதி மிகவும் அருமை எல்லாவற்றையும் அருமையாக படித்து ரசித்து மகிழ்ந்தேன்..


பிளஸ் 2 தேர்வு ஒரே மாதிரி மார்க்குகளை இரட்டை சகோதரிகள் பெற்றது மிகவும் ஆச்சரியமான செய்தியாக படிக்க வைத்தது. எல்லா கடவுள் படங்களும் செய்திகளும் மிகவும் அருமை ஆன்மீக உணர்வை தூண்டும் வகையில் இருந்தது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.   


வெள்ளியங்கிரி மலையில் ஏறிய சிறுவன் உயிர் இழப்பு என்று செய்தி அதிர்ச்சியாக இருந்தது. கிரைம் கார்னர் பக்கத்தில் வந்த செய்தி அதிர்ச்சியாக இருந்தது ஆன்லைனில் கத்தி ஆர்டர் செய்து அதனால் மருத்துவ கல்லூரி மாணவர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டது மிகவும் மன வருத்தத்தை கொடுத்தது.


உக்ரைன் மீது 100 டிரோன்களை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தியது பயங்கரம் செய்தியாக இருந்தது. தமிழகத்தில் பலமான தலைமை அவசியம் என்ற பவன் கல்யாண் அவர்களின் கருத்து உண்மையானது.


புதன்கிழமை விடியலை புத்துணர்வு தரும் விடியலாக எல்லா செய்திகளும் அழகாக தொகுத்து எங்களை உற்சாகமாக வைக்கும் தமிழ்நாடு இ பேப்பரில் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 


நன்றி

 உஷா முத்துராமன்