tamilnadu epaper

தோழமையால் இணைவோம்

தோழமையால் இணைவோம்


பள்ளிப் பருவத்தில் 

   அன்புடன் தோழமை

உள்ளத்தில் நிற்கும் 

   எப்போதும் தலைதூக்கும்

துள்ளி விளையாடும்

    அன்புப் பரிமாற்றங்கள்

சொல்லாத வார்த்தைகள்

     சுடர்விடும் நெஞ்சுக்குள்

மெல்ல அசைபோடும்

   மிருதுவாய் துளிர்விடும் 

நல்லதாம் காதல்போல்         

   நண்பர்கள் இருவருக்குள்!


ஒருவருக் கொருவர் 

     உதவியாய் நாமிருப்போம்

இருளுக்கு ஒளிதந்து

    இணையாய் நாமிருப்போம்

இருவரையும் இணைக்கும்

    இனிதான தோழமை

இருவரின் பாதைகள்

      பிரிந்தே போனாலும்

வரும்நாளில் ஒன்றாய்

      மறுபடிச் சேர்ந்திருப்போம்!


வாலிப வயதினில்

      வந்த நட்பில்

வேலைசெய் இடத்தில்

      விளைந்த நட்பில்

அணிசெய்யும் தோழமையில்

     அமைவதும் ஓரிருவர் 

இணைவோம் தோழமை

      என்னும் பண்பால்!!!



-வைரமணி 

சென்னை