நாடகத்தில் ஓவியத்தில்
காதல் இனிது.!
நடைமுறையில் காண்பதுவோ
அது மிக அரிது.!
காவியத்தில்் கவிதைகளில்
காதல் இனிது.!
காட்சியிலே அனுபவத்தில்
அது மிகக் கொடிது.!
சாதிமதம் இல்லையெனில்
காதல் இனிது.!
சற்றே நம் வீட்டிலென்றால்..
கசக்கும் மருந்து.!
அடுத்த வீட்டில்..
தெருவிலென்றால்..
காதல் இனிது..
அதுநமது வீட்டிலென்றால்..
ஏற்பவர் அரிது.!
ஆண்களுக்கும் பெண்களுக்கும்
காதல் பொதுஉடமை!
கண்கள் செய்த
பாபம் என்றால்..
ஐயா அது கொடுமை.!
ஆதலினால் காதல் செய்வீர்.. பாரதியின் வாக்கு.. அன்றாடம் உலகினிலே காதலுக்கே என்னுடைய வாக்கு.!
-வே.கல்யாண்குமார்.