tamilnadu epaper

கல்லறையில் நிறைவேறா காதல்

கல்லறையில் நிறைவேறா காதல்


சுட்டொிக்கும் சூாியன் கூட தன் கோபம் குறைத்து சாந்தம் கொடுத்தது,

நீ ஏனே பாா்வையால் சுட்டொிக்கிறாய்?

 நான் என்ன கேட்டேன்!உன் இதயத்தில் இடம்தானேகேட்டேன்! இதயத்தையே கேட்டது போல பதறுகிறாயே? 

முழுநிலவு பிரகாசமாய் உன் வதனம் போல சந்திர பிம்பமாய்வந்ததே, அதைக்கூட நான் ரசிக்கவில் லை! அதனால் நான் ரசணையில்லாதவனா இல்லை ,அதைவிட பிரகாசமான நின் முகமே தொிகிறதே ! 

சுனாமி அலையில் கூட தப்பித்திட்டேன் 

நின் காதல் வலையில் சிக்கி விட்டேன்! சிந்தாமணியே ! நீயின்றி நானில்லை எனக்கென பிறந்தவள் நீ!

 பல போராட்டம் நடத்தி சுதந்திரம் கிடைத்தது!பல தியாகம் ,சுதந்திரம் வாங்க வழியானது!

என்ன தியாகம் செய்தால் நீ சம்மதம் சொல்வாய்! நான் நல்ல தோா்வீணை! அதை நலங்கெட புழுதியில் எறிந்திடாதே! 

உன் வாா்த்தைக்கு கட்டுப்படுகிறேன்! 

தாய் தந்தையை உறவுகளை உதறுகிறேன்! உன் அன்பே பிரதானம் என்பதால் கட்டிய வேட்டியோடு வருகிறேன்!அதற்கும் இணங்காவிடில் கல்லறைப்பக்கம் வருவாயா கனியமுதே நம் காதல் நிறைவேறா நிலை வந்தால் எனக்கான ஒரு இடம் தேடி விட்டேன்! அங்கு வந்து எனைப்பாா்ப்பாயா? பைங்கிளியே!! காதலியில்லாததால் கல்லறையில் உறங்குகிறான் என கல்வெட்டில் பொறிக்கப் பட்டிருந்தது! 



-நா.புவனாநாகராஜன் செம்பனாா்கோவில்