tamilnadu epaper

வாசகர் கடிதம் (நெல்லை குரலோன் )-14.05.25

வாசகர் கடிதம் (நெல்லை குரலோன் )-14.05.25


தமிழ்நாடு இ பேப்பரின் தனிச்சிறப்பு அதி அதி காலை ஆர்ப்பாட்ட அட்ரா சிட்டி இல்லாமல் 

புத்த அமைதியில் அலைபேசிக்குள் பிரவேசித்து பூரண திருப்தியும் பூரிப்பு வெளிச்சமும் குறையின்றி தருவது.வாசகர் நலம் போற்றும் -- சமூக நலன் போற்றும் இந்த சக்தி மிக்க பணி சரித்திரம் படைக்கும். சந்தேகமில்லை. இது சத்தியம். அன்பான ஆசிரியர் குழுவினர்க்கு ஆற்று வெளாளமாய் அறிவார்ந்த வளமார்ந்த வாழ்த்தும் பாராட்டும் வந்து வந்து குவியட்டும்... குவலயம் சீரடைந்து செழிக்கட்டும். மற்றவரை சுயநல எதிர்பார்ப்பு ஏதுமின்றி 

பாராட்டி மகிழும் பண்பட்ட நெறி பாரினில் பரந்து விரிந்து செழித்து 

பரவசம் பொங்கட்டும்.


மீண்டும் பயங்கர வாத ஆதரவு எடுத்தால் பதிலடி கடுமையானதாக இருக்கும்.-- பிரதமர் மோடி எச்சரிக்கை.

அணையப் போகும் நெருப்பு கொஞ்சம் பிரகாசமாகத் தானே எரியும்!

பயங்கர வாதம் இந்த உலகிலிருந்து முற்றிலும் அகற்றப்பட வேண்டிய அற்புதத் தருணம் வந்தாகி விட்டது.

அடிப்படையில் மனிதன் இன்னும் ஆதிவாசியாய் -- காட்டுமிராண்டி யாய் 

வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பதை உறுதிப் படுத்தும் வகையில் தான் இன்னமும் இங்கே வக்கிரமும் வெறுப்பும் தலை விரித்தாடும் போர் தொடர்ந்து நடக்கிறது.

விரிந்த அறிவும் செழித்த அனுபவமும் பெற்ற உலகத் தலைவர்கள் ஒரே ஒரு நிமிஷம் யோசித்தால் போதும்...


உலகளவில் பிரசித்தம் பெற்றுள்ள நாம் இந்த பூமியின் நலனுக்காக மனித அநாகரீகத்தின் உச்சமாக இருக்கும் போரை ஒழித்துக் கட்ட உருப்படியாக இதுவரை யாரும் ஏதும் செய்தோமா? இதை நினைத்துப் பார்த்தாலே போதும்...

அடுக்கடுக்காக போரை ஒழிப்பதற்கான ஆலோசனைகளும் 

வழிமுறைகளும் தாராளமாக பூப்பூவாய் மலரும். தங்கள் அதிகார பலத்தால் --

புகழ் பலத்தால் இந்த பூமியில் பூரண அமைதியை நிச்சயம் நிலை நாட்டி விடலாம்.

அதற்கான அற்புதத் தருணம் இது...


பஞ்சாப் கள்ளச் சாராயம் விவகாரம் 

21 பேர் பலி.நம் மாநிலம் மட்டுமல்ல நாடு முழுவதும் இந்த நோய் பரவி மக்களை யெல்லாம் பாடாய் படுத்துகிறதே...

என்று தீரும் இந்த போதை கலாச்சாரம்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: தீர்ப்பு வெளியாகி விட்டது.

மனதால் திருந்தி மனிதராய் வாழப் பழகிக் கொள்ள வேண்டும், குற்றத்தில் சிக்காமல் தப்பித்திருக்கும் மற்றோர்களும்...

நலம் தரும் மருத்துவம் நல்லதொரு பகுதி.

நாளும் தவறாமல் வருகிறது. ஆழ்ந்த அக்கறை எடுத்து 

ஆரோக்கிய வழிமுறைகளை 

கடைப்பிடிக்க துணிந்து விட்டால் 

நிம்மதி நிச்சயம் 

நெருக்கடி இல்லை.

படித்தால் மட்டும் போதாது...பாடம் உணர்ந்து பண்படுவது தான் பகுத்தறிவின் அடையாளம்.

' ஆன்லைன் சூதாட்டம்.

தடுத்து நிறுத்துவது எப்போது?

மருத்துவர் அய்யா முழக்கம். இனி அவரின் முஸ்தீபு மத்திய அரசை எதிர்த்துத் தானே வலம் வரும்! ஆனாலும் 

இன்னும் 

மதில் மேல் பூனை தான்... கூட்டணி!

தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் வசுமதி இராமசாமி வரலாறு.

அவரின் மகத்தான வாழ்க்கையின் ஜொலிப்பை உணர முடிந்தது. பிறருக்காக வாழ நினைக்கும் மனோபாவமே மனிதருக்கு வளம் நல்கும் வரப்பிரசாதம்!

சதா தன்னைப் பற்றி மட்டுமே நினைப்பது 

மிருக நிலை அல்லவா? இதைச் சரியாகப் புரிந்து கொண்டால் உள்ளம் வெளிச்சம் பெறும்.

நாளும் உவகை இன்பம் நம்மை நாடி வரும். இலக்கியப் பக்கங்கள் வழக்கம் போல் இதம்... இதம்!

கவிதைகள் அனைத்தும் அட்டகாசம்.

எளிமை...இனிமை...

இளமை என்று தலைப்பு போட்டால் கூட பொருத்தமாக இருக்கும்! அந்தளவுக்கு தகுதியானவைகளை

தினந்தினம் தேர்வு செய்து வாசகர்களை 

தித்திக்க வைக்கும் 

தமிழ் நாடு இ பேப்பரின் சாதனை 

நாளைய வரலாறு!

நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!



-நெல்லை குரலோன் 

பொட்டல் புதூர்