tamilnadu epaper

புவி.......புவி

புவி.......புவி


புவியே உலக

உயிர்களின் புகலிடம்

புகலிடம் தானே

பொலிவா யாகும்


ஆகும் உயிர்கள்

அழகாய் வாழும்

வாழு முயிர்க்கு

வளமான இருப்பிடம்!


இருப்பிடந் தானே

இப்புவி தேனே

தேனா யமைந்து

தெளிவாய்க் காக்கும்!


காக்கு முயிர்கள்

கவினாய்த் திகழும்

திகழும் தேர்ந்த

கோள்தான் புவியே!


-முனைவர்

இராம.வேதநாயகம்