tamilnadu epaper

புவி வெப்பம்

புவி வெப்பம்

ஐம்பெரும் சக்திகள் அதனதன் இயல்பிலே அமைந்ததே இயற்கையாகும் அண்டமும் கோள்களும் ஆழியும்இயங்குதல்

அவைகளின் நியமத் தாலே

இம்மகா சக்திகள் மிகுவதால் குறைவதால் இயற்கைபே ரழிவுண் டாகும் எரிமலை சீற்றமும் ஆழிக்கோள் தோற்றமும் இமயமும் உருகு மிதனால்

ஐம்பெரும் சக்திகள் ஐம்புல னாகவே அமைந்ததே மனிதப் பிண்டம்

ஐம்புலன் வென்றவன் அகிலத்தை ஆளலாம் அறிந்தவன் சித்தர் ஞானி

ஐம்புலன் ஆசையால் இயற்கையை பகைத்து நாம் அழிவினைத் தேடிக் கொண்டோம்

அறிவியல் வளர்ச்சியின் அறுவடைப் புவியினை அனுதினம் வெப்ப மாக்கும்



-குடந்தை பரிபூரணன்