வயல் வேலை முடிந்து வீட்டிற்கு நுழைந்த பழனி, அம்மா வயிற்றுவலியால் துடி துடிப்பது கண்டு பதறியவன் ,மனைவியிடம் சொல்லிவிட்டு ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தான்.
அவன் கிராமத்தில் இருந்து மெயின் ரோடு
3 கீ மி.அங்கு போனால் தான் ஆஸ்பத்திரி, மற்றும் எல்லா வசதிகளும்.
பாதித் தூரம்போனதும் வண்டி நிற்கவே பெட்ரோல் டேங்க் பார்த்த போது.
"ஐய்யோ ஐய்யோ " சுத்தமா பெட்ரோல் இல்லையே.
நடுவில மாடிக்கிட்டோமே." அவசரத்தில் கிளம்பும் போது வாங்கி வைத்திருந்த பெட்ரோலை போடாமல் வந்து விட்டோமே? .
யாராவது வண்டியில் போனாலும், கொஞ்சம் பெட்ரோல் கடன் வாங்கிப் போகலாம் . யாரும் டவுன் . போகவில்லை.அங்கிருந்து வருவார்களும் இல்லை.
அம்மாவின் அழுகை வலியால் துடிப்பதை பார்த்துஎன்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தான் பழனி.
கண்ணுக்கெட்டிய தூரத்தில்
சிவஞானம் ஓய்வு பெற்ற ஆசிரியர் த ன் டிவிஎஸ் ல் வரவே முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
அப்படிப் பழனி நடக்கக் காரணம்,அவங்க குடும்பத்துக்கும் பழனிக்கும் தீராபங்காளி சண்டை ,போலீஸ் கோர்ட்கேஸ்.
வண்டியை நிறுத்தி விட்டுச் சிவஞானம் வலிய பழனி அம்மாவிடம் வந்து, நிலைமையைப் பார்த்த பின்,
"சிவகாமி இப்படி நீ அவஸ்தை படுவதைப் பார்த்து நான் உதவி பண்ணலேன்னா, நான் மனுஷன் கிடையாது.'
.
பகை என் பையன்கிட்டே தானே.ஆயிரம் இருந்தாலும் தங்கச்சியை இப்படி விட்டுட்டுட்டு போக முடியுமா? "பகைவனுக்கும் அருள்வாய் "என்று பாரதியார் சொல்லி இருக்காரு.
"இந்தா டவுன்ல 2 லிட்டர் பெட்ரோல் வாங்கினேன். டேங்க்நிரப்பிட்டு ஆஸ்பத்திரி க்கு சீக்கிரம்கிளம்புங்க.'
இப்படிக்கு
ஆனந்த் ஸ்ரீனிவாசன்
65 நாலாவது தெரு,
கோத்தாரி நகர்
ராமபுரம், சென்னை 89