tamilnadu epaper

பென்னாகரத்தில் தமிழ் வார விழா

பென்னாகரத்தில் தமிழ் வார விழா


தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் பாரதி தாசன் பிறந்த நாளை யொட்டி பென்னாகரம் தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழ் வார விழா நடைபெற்றது.

விழாவிற்கு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கே. வி குமார் தலைமை தாங்கினார். ஆசிரியர் சரவணன் முன்னிலை வகித்தார்.

விழாவில் பாரதிதாசனின் தமிழ்பற்று சமூக பார்வை அவரின் எழுத்தாற்றல் குறித்தும் இன்றைய சூழலில் தமிழ் வளர்ச்சி குறித்தும் விழா விருந்தினர்கள்.பேசினர்.

விழாவில் தமிழ் சங்க தலைவர் முருகேசன் செயலாளர் கெளரி லிங்கம் பொருளாளர் லெனின் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டார். விழாவை தமிழ்சங்க ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் கூத்தப்பாடி கோவிந்தசாமி ஒருங்கிணைத்தார் ஆசிரியர் சந்தோஷ் குமார் நன்றி தெரிவித்தார்.