தஞ்சாவூர், மே 2 –
புராதனமும், நூதனமும் சேர்ந்தது தான் சனாதானம் என வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறினார்.
கும்பகோணத்தில் நடந்த குருஜி சத்சங்கம் நிகழ்ச்சியில் வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பங்கேற்றார். இதில் அவர் பேசியதாவது:
பின்னர், அவர் பேசியதாவது:
கடவுள் நம் உடலுக்குள் தான் இருக்கின்றார். வெளியில் கலை, கலாச்சாரம், பண்பாடு தான். மனம் நிம்மதிக்கு ஆன்மீகம் தேவை. அனைவரும் ஒன்றிணைந்து சேவை செய்ய வேண்டும். முன்பு குடிசை வீடுகள் காணப்பட்டது. தற்போது, அனைத்தும் மாறிவிட்டது. தமிழகத்தில் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. சாலைகளும் தரமாக அமைக்கப்பட்டுள்ளதுடன் பலவிதமான முன்னேற்றங்கள் உருவாகி உள்ளது.
புராதனமும், நூதனமும் சேர்ந்தது தான் சனாதானம். வாழ்க்கையில் அனைத்து விதமான முன்னேற்றங்கள் வேண்டுமானால் நம் அடிப்படை நன்றாக இருக்க வேண்டும். இதற்கு கலாச்சார, பண்பாட்டை சரியாக வைத்திருக்க வேண்டும். இதனை தஞ்சாவூர் நன்றாக வைத்திருக்கின்றார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
++
BOX
சோம்நாத் கோவிலின்
சிதைந்த லிங்கத்தின் பாகங்கள்
பல ஆண்டுகள் பழமையான சோம்நாத் கோவிலின், சிதைந்த லிங்கத்தின் சில பாகங்களை பக்தர்களின் பார்வைக்காக ரவிசங்கர் கொண்டு வந்தார். இது பற்றி அவர் கூறுகையில், " சிதைந்த பாகங்களை வைத்திருந்தவர், சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு, காஞ்சி மகா பெரியவரிடம் தெரிவித்த போது, இந்தியா சுதந்திரம் பெற்ற, ராமர் கோவிலை கட்டியப்பிறகு, ரவிசங்கரிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளார்.
அதன்படி, ரவிசங்கரான என்னிடம் ஒப்படைத்தனர். இந்த லிங்கத்தை தரிசிப்பது ஜோதி லிங்கத்தை தரிசித்த பலன் உண்டு" என்றார்.