tamilnadu epaper

கடையநல்லுார் நீலமணி நாதசுவாமி கோவில் பிரம்மோற்ஸவம் துவக்கம்

கடையநல்லுார் நீலமணி நாதசுவாமி   கோவில் பிரம்மோற்ஸவம்   துவக்கம்


தென்காசி, மே 2– -

தென்காசி மாவட்டம் கடையநல்லுார் ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ நீலமணி நாதசுவாமி கோவில் பிரம்மோற்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.

கடையநல்லூரில் உள்ள ஸ்ரீ பூமி நீளா நீலமணி நாத சுவாமி கோவில், 15ம் நூற்றாண்டை சேர்ந்தது. சுவாமி திருப்பதி வெங்கடாசலபதியை போல காட்சி தருகிறார். இந்த கோவிலில் பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. பட்டாச்சார்யார் பாலகிருஷ்ணன் தலைமையில் விழா நடந்தது. பிரம்மோற்சவ விழா மே 9ம் தேதி வரை நடக்கிறது.

தினமும் கட்டளை மண்டக படிதாரர்கள் மூலம் விழா நடக்கிறது. சுவாமி தினமும் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறார்.  

மே 9 காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.