மருத்துவமனையில் நிமோனியா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸுக்கு மீண்டும் சுவாசப் பாதையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என வாடிகன் செய்தி தெரிவித்துள்ளது. மூச்சுக் குழாயின் 2 இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் இதனால் அவருக்கு மீண்டும் செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருகின்றது எனவும் அவரது உடல்நிலை மீண்டும் பின்னடைவை சந்தித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.