Breaking News:
tamilnadu epaper

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி லெபனானுக்குள் தாக்குதல் நடத்தும் சிரியா

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி லெபனானுக்குள் தாக்குதல் நடத்தும் சிரியா

போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகும் லெபனான் எல்லைக்குள் சிரியா தாக்குதல் நடத்தி வருகின்றது. 


லெபனான் அரசு மற்றும் சிரியாவை கைப் பற்றி ஆட்சி செய்து வருகின்ற பயங்கரவாதிகள் தலைமையிலான இடைக்கால அரசுக்கும் இடையே மார்ச் 17 அன்று ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.


இரண்டு முறை துப்பாக்கி சண்டை நடைபெற்ற நிலையில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. எனினும் இந்த ஒப்பந்தத்தை மீறி சிரியா லெபனான் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.


மார்ச் 16 அன்று ஹிஸ்புல்லா அமைப்பினர் மூன்று சிரியா வீரர்களை கடத்தி படுகொலை செய்த தாக சிரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டிய பின்னர் இந்த மோதல் துவங்கியது. 


இந்த தாக்குதலில் லெபனான் தரப்பில் ஏழு பேரும் சிரியா தரப்பில் மூன்று பேரும் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயம டைந்தனர். இதனை இரு அரசாங்கங்களும் உறுதிப்படுத்தியுள்ளன. ஹிஸ்புல்லா அமைப்பு இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. இது தொடர்பாக லெபனான் பாதுகாப்புதுறை அமைச்சர் கொடுத்த பேட்டியில், ஹிஸ்புல்லா அமைப்பு சிரியாவைச் சேர்ந்த 3 நபர்களை சுட்டுப் படுகொலை செய்துள்ளது. ஆனால் கொல்லப்பட்டவர்கள் யாரும் சிரியா வீரர் கள் அல்ல.


அவர்கள் அனைவரும் கடத்தல் காரர்கள் தான். அவர்களது உடல் சிரியா அதிகாரி களிடம் ஒப்படைக்கப்பட்டது என லெபனான் பாதுகாப்புத் துறை அமைச்சர் மைக்கேல் மெனாசா தெரிவித்துள்ளார். கொல்லப்பட்டவர்கள் யார் என உறுதி செய்வ தற்கு முன்பாகவே சிரியா ராணுவம் வடகிழக்கு லெபனான் நகரமான கஸ்ர் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்த துவங்கியது. இதன் பிறகு தாக்குதலை நிறுத்த போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி மார்ச் 20 அன்று மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது சிரியா.


  இது ஒருபுறமிருக்க அல் அசாத் தலைமையி லான அரசு ஆட்சியில் இருக்கும் போது உருவாக் கப்பட்ட சிரியாவின் ராணுவத் தளங்களின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி ராணுவக் கட்டமைப்புகளை பலவீனப்படுத்தி வருகின்றது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு சிரியாவின் இடைக்கால அரசாங்கம் எந்த ஒரு எதிர் நட வடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பது குறிப் பிடத்தக்கது.