அரியலூர், ஏப்.9 -
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், திங்கள் கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பய னாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்துக்கு, ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்து, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அவர்களிடமிருந்து பெறப்பட்ட 441 கோரிக்கை மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். முன்னதாக அவர், மாற்றுத் திறனாளிகள் நல அலுவல கம் சார்பில் 3 பேருக்கு காதொலி கருவிகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 2 மாற்றுத்திற னாளிகள் குழுக்களுக்கு வாழ்வாதார நிதியாக தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலையும், ஒரு முதியோர் குழுவுக்கு ஆதார நிதியாக ரூ.15,000-க்கான காசோலையும், சுய உதவிக் குழு உறுப்பினர் (இறந்தவர்) காப்பீட்டு தொகை ரூ.2 லட்சத்துக்கான காசோலையும் என மொத்தம் ரூ.4.15 லட்சம் மதிப்பிலான காசோலையை வழங்கினார்.