tamilnadu epaper

மணமேல்குடி வெள்ளூர் நடுநிலைப் பள்ளியில் சமத்துவ நாள் விழா அனுசரிப்பு

மணமேல்குடி வெள்ளூர் நடுநிலைப் பள்ளியில் சமத்துவ நாள் விழா அனுசரிப்பு


புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் வெள்ளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் அனுசரிப்பு தினம் சமத்துவ நாள் விழா அனுசரிப்பு பொறுப்பு தலைமை ஆசிரியர் மு.சீனிவாசன் தலைமையில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது ஆசிரியர்கள் சுவாமிநாதன் மகாலட்சுமி சத்யபிரியா அருள்ஜோதி அம்பிகா மற்றும் மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் 

சாதி மத பேதமற்ற சமுதாயம் படைப்போம் 

சாதிய அடக்குமுறைகளை ஒடுக்குவோம் அனைவரும் சமம் ஒதுக்கப்பட்டவர்களின் உரிமைகளை பாதுகாப்போம் ஒடுக்கப்பட்டவர்களுக்கு சமத்துவ உரிமை அளிப்போம் சாதி மத பேதமின்றி அனைவரும் சமம் என்பதை உறுதி கொள்வோம் போன்றவை உறுதிமொழிகளாக எடுத்துக் கொள்ளப்பட்டன