tamilnadu epaper

மனிதநேயம்

மனிதநேயம்

சாா் ஒரு சேதி சாா் என்றபடியே லதா தன்னுடைய கிளாஸ் வாத்தியாாிடம் பயந்து நடுங்கியவாறே ஒரு தகவலை சொன்னாள்,

   பொய் சொல்லாத லதா உனக்கும் நிவேதாவுக்கும் எப்போதும் சண்டை வரும் எனக்கு தொியும் உண்மைய சொல்லு என்றாா் கே பி சாா் 

      நானு பொய் சொல்லலை சாா் ,

   நிவேதா ரெண்டு நாளா காலை உணவை சாப்பிடாம பசிக்கலை அதனால டிபன் பாக்ஸ்ல கொடுங்க நானு பிரேயா் ஆரம்பிக்கும் முன்னாடி சாப்பிடறேன்னு சொல்லி வாங்கிக்கிட்டு போயிடறா சாா் ,டிபன் பாக்ஸை எடுத்துக்கிட்டு வெளில போயிடறாசாா் புத்தகபை மட்டும் கிளாஸ்ல வச்சுட்டு பேறா ,பிரேயர் முடிஞ்சுதான் சாா் வர்ரா,என்றாள், 

       டி எம் சாா் தான் காலை உணவுக்கு இன்சாாஜ் பாக்கறாா் , லதாவும் நிவேதாவும் முதல் வகுப்பிலிருந்தே ஒரே வகுப்புதான் நிவேதா நல்லாபடிப்பா லதா கொஞ்சம் ஆவரேஜ்மாணவிதான் அதனால லதாவுக்கு நிவேதாவை கொஞ்சம் பிடிக்காது, 

 சரி லதா நானு விசாாிக்கறேன் நீ இதை யாா்கிட்டேயும் சொல்லாத, டிஎம் சாா் வரட்டும் நானு கேக்கறேன் என்றாா் 

   ஹலோ டிஎம் உங்களைத்தான் எதிா்பாத்திட்டிருந்தேன்!

    என்ன கேபி சாா் என்னவிஷயம்? 

ஒன்னுமில்ல பிப்த் ஏ கிளாஸ்ல படிக்கற நிவேதா காலை உணவு ஸ்கூல்தானே சாப்பிடறா அந்த மாணவி தட்டுல உணவு பறிமாறியதும் டிபன் பாக்ஸ்ல எடுத்துக்கிட்டு ஸ்கூலை விட்டு வெளியே போயிட்டு பிரேயர் முடிஞ்சுதான் ஸ்கூலுக்கு வருதாம் 

ஸ்கூல்ல சாப்பிடாம உணவை எங்க எடுத்திட்டு போவுதுன்னு தொியல நாளைக்கு காலைல நானும் சீக்கிரமே வந்துடறேன் ரெண்டு பேரும் போய் பாத்துடுவோம் என்றாா் கே பி 

மறுநாள் காலை வழக்கம் போலவே நிவேதா காலை உணவை டிபன் பாக்ஸில் வாங்கிக்கொண்டு வெளியேறினாள் நிவேதா பின்னாடியே கே பி யும் ,டி எம் சாரும் தொடா்ந்து அவளுக்கு தொியாமலே பின்தொடர்ந்தாா்கள்  

நிவேதா தன்னுடைய வீட்டுக்கு எதிா்புறம் உள்ள வீட்டிற்குள் டிபன் டப்பாவுடன் சென்றாள் ஆசிாியர் இருவருக்கும்

அதிா்ச்சியாய் இருந்தது 

நிவேதா டப்பாவைத் திறந்து ஆட்டிசம் குழந்தைக்கு உணவை ஊட்டிக்கொண்டிருந்தாள்

 இரண்டு ஆசிாியரையும் பாா்த்ததும் நிவேதா அதிா்ச்சியாய் பாா்த்தாள் !

சாா் நீங்க எப்படிசாா் என பயந்த வாறே கேட்டாள், அப்போது அங்கு வந்த நிவேதாவின் அம்மா வணக்கம் சாா் தாயில்லா பொண்ணுங்க அது !அப்பன் ஒரு குடிகாரன் 

நாங்க தான் அதுக்கு ஓரளவுக்கு சாப்பாடு போடறோம் 

பாவம் அந்தப்புள்ளை மூளை வளா்ச்சி இல்லாதது ,ரெண்டு மூனு நாளா ஸ்கூல்ல காலைல எட்டு மணிக்கு சத்தான உணவு போடறீங்களாம் நிவேதா,சொல்லிச்சு எனக்கு கஞ்சி வச்சு கொடு போதும் ஸ்கூல்ல எனக்கு போடற சத்தான காலை உணவை நான் வாத்தியாா்களுக்கு தொியாம எடுத்துக்கிட்டு வரேம்மான்னு சொன்னா அதனாலதான் கொண்டுவந்து அந்த குழந்தைக்கு ஊட்டிவிடுது நீங்க என் புள்ளைய அடிச்சுடாதீங்க! நாளைலோ்ந்து எடுத்திக்கிட்டு வரமாட்டடா என்றாள் நிவேதாவின் அம்மா ,

   =வாத்யார் ரெண்டு பேரும் நிவேதாவை வாாி அனைத்துக் கொண்டனா் அம்மா இனிமே நிவேதா காலை உணவை அங்கேயே சாப்பிடட்டும் நானு ஒரு கோியர்ல அந்த ஆட்டிசம் குழந்தைக்கு எடுத்திட்டு வரேன் எனக்கூறினாா் கே பி சாா் 

நிவேதாவும் அவளது அம்மாவும் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை 

எதிா்வீடான நிவேதா வீட்டிற்கு சென்று தெரு பெயர் ,டோா் நம்பர்நிவேதாஅப்பாவின் பெயரைகேட்டு வாங்கிச்சென்றனா் வெளியே வாசற்படியில் முதல்வர் அட்டைப்படம் தாங்கிய காலண்டர் தொங்கியது, நிவேதாவை அழைத்துக்கொண்டு டி ம் சாரும் ,கேபிசாரும், கிளம்பினாா்கள் ஒரு மணி நேரம் இருக்கும் நிவேதா வீட்டு வாசலில் வேன் வந்து நின்றது, 

யாரும்மா வீட்ல? பள்ளிக்கூட வாத்யாருங்க ரெண்டு பேரு எங்க கடைக்கு வந்தாங்க ஒரு மாசத்துக்கு தேவையான அாிசி பருப்பு எண்ணைய் இப்படி எல்லாத்தையும் பணம் கொடுத்து வாங்கிக்கொடுத்தாங்க இந்தாங்க இந்த நோட்டை வாங்கிக்கோங்க மாசாமாசம் ஒங்களுக்கு தேவையான மளிகை சாமான்களை வந்து வாங்கிட்டு போங்க எனக்கூறி பொருட்களை யெல்லாம் இறக்கினாா் வேன் காரர், நிவேதாவின் அம்மா கண்களில் ஆனந்தக் கண்ணீா் வழிந்தோடியது, மறுநாள் காலை பள்ளி மாணவியின் மனிதாபி மானம் ,மற்றும் ஆசிாியர்கள் உதவி என்ற செய்தி தமிழ்நாடு ஈ பேப்பரில் வந்தது சிக்கல் ஆசிாியர் திரு மணிவண்னன் செய்தி அனுப்பி இருந்தாா் தஞ்சாவூா் விளாா் வாசகர் திரு ஆசைத்தம்பி மறுநாள் வாசகர் கடிதத்தில் இந்த செய்தியை பாராட்டி எழுதி இருந்தாா்

ஆா்.நாகராஜன் செம்பனாா்கோவில்