tamilnadu epaper

மிதிவண்டித் தடம்

மிதிவண்டித் தடம்


முருங்கக்கா, மல்லியிலை 

என்று கூவி

அவற்றை மட்டுமே

மிதிவண்டியில்

விற்றுப் போகும்

அவளின் வயிற்றுப்பசி

எவ்வாறு தீர்ந்திடுமென

அடிக்கடித் தோன்றிடுமெனக்கு. 

கொசுறாக கிடைக்கும் மல்லியிலையும்

பத்து ரூவாய்க்கு மூன்றுமாய் 

விற்கும் முருங்கைக்காயும் தவிர

மனமென்ற ஒன்று 

படர்ந்திருக்கிறது

அவளிடம்

மிதிவண்டித் தடம் போல..



-தாணப்பன் கதிர்

( ப. தாணப்பன் )