tamilnadu epaper

முதல் வகுப்பில் சேர்க்கிறார்கள் குழந்தையை!

முதல் வகுப்பில் சேர்க்கிறார்கள் குழந்தையை!

சற்றே சந்தோஷித்தும் 

மலங்க விழித்தவாறுமாய் செல்கிறது.

வெளியுலகம்பார்த்த சந்தோஷத்திலும் 

புத்தாடை அணிந்த பூரிப்பிலுமாய்!


ஊர் கேட்கிறார்கள்.

சொல்கிறது.


தெரு கேட்கிறார்கள்.

யோசித்து பின் சொல்கிறது.


முகவரி கேட்கிறார்கள்.

அருகிலிருக்கும் பெற்றோர்களைஏறிட 

அவர்கள் முன்னெடுத்துக்கொடுத்த 

வார்த்தை பற்றி நூற்த்து 

பகுதி பகுதியாய் சொல்கிறது.


பெயர் கேட்கிறார்கள்.

சொல்கிறது.


சகோதரனின் பெயர் கேட்கிறார்கள்.

சொல்கிறது.


சகோதரியின் பெயர் கேட்கிறார்கள் சொல்கிறது.


உறவினர் பெயர் கேட்கிறார்கள் சொல்கிறது.


அருகாமை வீட்டுக் குழந்தைகளின் பெயரையும் அவர்களது பெற்றோரின் பெயரையும் கேட்கிறார்கள் சொல்கிறது.


அம்மாவின் பெயர் கேட்கிறார்கள் சொல்கிறது அம்மா என!


அப்பாவின் பெயர் கேட்கிறார்கள் சொல்கிறது அப்பா என!



-விமலன்.