tamilnadu epaper

ராணிப்பேட்டை பாலாற்றங்கரையில் தேசிங்கு ராஜா – ராணிபாய் நினைவிடம் புனரமைக்கும் பணி: அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு

ராணிப்பேட்டை பாலாற்றங்கரையில் தேசிங்கு ராஜா – ராணிபாய் நினைவிடம் புனரமைக்கும் பணி: அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு

ராணிப்பேட்டை, ஏப். 11


ராணிப்பேட்டை பாலாற்றங் கரையில் அமைந்துள்ள தேசிங்கு ராஜா மற்றும் ராணிபாய் நினைவிடத்தினை பொதுப்பணி துறையின் மூலம் முதற்கட்டமாக ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் பழமை மாறாமல் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


இந்த புனரமைக்கும் பணிகளில் இதுவரையில் 30 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. நினைவு மண்டபம் பழமை மாறாமல் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அவைகளுக்கு மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.தொடர்ந்து நினைவு மண்டப இடத்தினை சுற்றி சுற்றுச் சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் அவைகளில் புதிய வடிவமைப்புகள் அமைக்கப்படுவதையும் கேட்டறிந்தார்கள். பணிகளுக்கு தேவையான அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்ள ரூ.6.46 கோடி மதிப்பீடு நிதி ஒதுக்கீடு பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.


இந்த நினைவிட பகுதியில் மேலும் அமைக்கப்பட உள்ள தேசிங்கு ராஜா மற்றும் ராணி பாய் அவர்களின் சிலை அமைப்புகள், பூங்காக்கள், நீரூற்றுக்கள், நடைபாதைகள் இவைகள் குறித்தும் கேட்டறிந்தார். பணிகள் அடுத்த இரண்டு மாதத்திற்குள் முடிக்க கேட்டுக் கொண்டார்.


இந்த ஆய்வின்பொழுது, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மணிகண்டன், பொதுப்பணித்துறை பாரம்பரிய கட்டிட கண்காணிப்பு பொறியாளர் ராஜ்குமார், செயற்பொறியாளர் நாராயண மூர்த்தி, இராணிப்பேட்டை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரிபுரசுந்தரி, பாரம்பரிய கட்டிட உதவி செயற்பொறியாளர் ஸ்ரீனிவாசன், நகரமன்ற உறுப்பினர்கள் வினோத், குமார், கிருஷ்ணன், ஒப்பந்ததாரர் புருஷோத்தமன் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.