tamilnadu epaper

லவ்வு

லவ்வு

"லவ் பண்றப்ப...பூவாங்கி கொடுக்க தெரிஞ்ச உனக்கு இப்படி காலி பிளவர் பூ காய்ஞ்சு போனது கூட தெரியாம வாங்கி வந்து என் கழுத்த அறுப்பியா...?நரேஷின் காதல் மனைவி ஜோதியின் அந்தக்கால தியாக ராஜ பாகவதர் எட்டுக்கட்டை வாய்ஸ் அந்தத் தெருவையே கூப்பிட்டது.

"உஷ் ஏன் ஜோதி சத்தம் போடுற?"

"என்ன சத்தம் போடறேனா.. அப்ப என்னை காட்டுமிராண்டி" ன்னுசொல்ல வரியா?என்ற யார்க்கர் நச்'சென வந்தது.

'அதான உண்மை..' என மனதுக்குள் மட்டும் சொல்லிக்கொண்ட நரேஷ்.. இல்லம்மா கொஞ்சம் பையபேசுன்னுதான் சொன்னேன்.

அப்ப நான் இங்கிதம் இல்லாதவளா போயிட்டானா?என அடுத்த டாஸ் பால் நரேஷைத் தாக்கியது. இனி இவளிடம் எப்படி பேசுவது என ஙே'என ராஜேந்திரகுமார் ஃபேவரிட் போல் முழித்துக் கொண்டிருந்த நரேசுக்கு முகத்தில் வெயில் அடிக்க...

 

நல்லவேளை இதெல்லாம் கனவா...நாளைக்கு மொத வேலையா உனக்கு முடிவாயிருக்கிற வினோத்தையே கட்டிக்க நாம எல்லாத்தையும் மறந்திடலாமுனு ஜோதிக்கிட்ட சொல்லிட வேண்டியதுதான்...என முடிவுசெய்து கொண்டான்!

✍?காளிதாசன் நீர்விளங்குளம்