ரஷ்ய பாதுகாப்புத் துறை செயலாளர் செர்ஜி ஷோய்கு வடகொரியாவிற்கு சென்றுள்ளார். ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த நடவடிக்கைகள் முன்னேற்றம் கண்டு வரும் நிலையில் இப்பயணம் அமைந்துள்ளது. வடகொரியா இப்போரில் ரஷ்யாவிற்கு தொடர் ஆதரவுகளை கொடுத்து வந்தது. குறிப்பாக ஆயுதங்கள் மற்றும் வீரர்களை வழங்கியதாக கூறப்பட்டது. இந்நிலையில் வடகொரியா தலைநகர் பியாங்யாங்கில் ஜனாதிபதி கிம் ஜாங் உன் மற்றும் உயரதிகாரிகளை செர்ஜி சந்தித்துள்ளார்.