வந்தவாசி, மே 23:
வைகாசி மாத திருவோணத்தை முன்னிட்டு ஸ்ரீகைங்கர்யம் டிரஸ்ட் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த விளாநல்லூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் வரதராஜப் பெருமாளுக்கும், எம்பெருமான்களுக்கும், மேலும் ஆச்சார்யா ஸ்ரீ வேதாந்த தேசிகனுக்கும் விசேஷ பூஜைகள் நடைபெற்றன. மேலும் உற்சவ மூர்த்திகளுக்கு வண்ண மலர் மாலைகள் சாற்றப்பட்டு, மகா தீபாராதனை நடந்தேறியது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.