வலங்கைமானில் ஸ்ரீ பெரியநாயகி அம்மன் சமேத ஶ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ பெரியநாயகி அம்மன் சமேத ஶ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து மகா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. முன்னதாக ஆலயத்தில் அனைத்து சன்னதிகளிலும் அபிஷேக ஆராதனையும் தீபாராதனையும் நடைபெற்றது. கால பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.