பெரம்பலுார், மே 22-–
சென்னை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டிற்கு, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சென்றார்.அங்கு விரைவு போக்குவரத்து கழக பஸ்சில் ஏறினார். அந்த பஸ்சில் பயணம் செய்த பயணியரிடம் கலந்துரையாடி, குறைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து, டிரைவர் சீட்டிற்கு பின் உள்ள சீட்டில் அமர்ந்த அமைச்சர், டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் குறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். உளுந்துார்பேட்டை வரை பயணம் செய்த அமைச்சர், பஸ்சிலிருந்து இறங்கி அவரது காரில், தன் சொந்த ஊரான அரியலுாருக்கு புறப்பட்டு சென்றார்.