tamilnadu epaper

வாகனம் வாங்கித் தருவதாக பணம் மோசடி: இருவர் கைது

வாகனம் வாங்கித் தருவதாக  பணம் மோசடி: இருவர் கைது

தஞ்சாவூர், ஏப்.10 -

குறைந்த தொகை முதலீடு செய்தால் வாகனம் வாங்கித் தருவதாக கூறி 22 பேரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த 2 பேரை தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு காவ‌ல்துறை‌யின‌ர் கைது செய்தனர். தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல்நிலைய எல்லைக் குட்பட்ட பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் கடந்த 2018 ஆம் ஆண்டு தொலைக்காட்சிகளில் விளம்பரம் ஒன்றை கொடுத்தது. அதில் “குறைந்த முதலீடு செய்தால் வாகனம் வாங்கித் தரப்படும்” என்று அறிவிக்கப்பட்டது. அதைப் பார்த்த தஞ்சை மேலவீதியை சேர்ந்த வைத்தீஸ் வரன் என்பவர், அதை நம்பி சிறு தொகையினை கட்டி இருசக்கர வாகனத்தை வாங்கினார். அதன் பின்னர் மேலும் அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் 4 சக்கர வாகனம் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி முன்தொகை யாக ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் தொகையினை பெற்று ஏமாற்றி உள்ளனர். இதுபோன்று அந்த நிறுவனம் 22 நபர்களிடமும் பண மோசடி செய்ததாக வைத்தீஸ்வரன் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் செய்தார். அந்த நிறுவனம் ரூ.10 லட்சம் வரை மோசடி செய்ததாக கூறப்படு கிறது. புகாரின் பேரில் குற்றப்பிரிவு காவ‌ல்துறை‌யின‌ர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கோயம்புத்தூரைச் சேர்ந்த அர்பஷ் (46), சேலம் மாவட்டம், அயோத்திப்பட்டினத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத் (30) ஆகியோர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், அவர்கள் கோயம்புத்தூரில் இருப்பதாக தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு தனிப்படையினருக்கு தகவல் கிடைத் தது. அதன் பேரில் தனிப்படை காவல்துறையினர் கோயம் புத்தூர் சென்று அர்பஷ், ஹரிபிரசாத் ஆகிய 2 பேரை யும் புதன்கிழமை கைது செய்தனர். இது போன்ற நிறுவனங்களின் உண்மைத் தன்மை தெரியாமல் பொதுமக்கள் யாரும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு காவ‌ல் துறை‌யின‌ர் எச்சரித்துள்ளனர்.