tamilnadu epaper

வாசகர் கடிதம் (அபிபுல்லாகான். க)-29.04.25

வாசகர் கடிதம் (அபிபுல்லாகான். க)-29.04.25


 தமிழக முதலமைச்சர் சட்ட சபையில் 110 விதியின் கீழ் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மற்றும் சில சலுகைகளை முதலமைச்சர் அறிவித்தார்.

 பத்ம விருதுகள் தமிழகத்தைச் சேர்ந்த அஜித்குமார் ரவிச்சந்திரன் அஸ்வின் தேவசேனாதிபதி நல்லி குப்புசாமி ஷோபனா ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.

 மனோ தங்கராஜ் மீண்டும் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்பு.

 குமரி ஆழ்கடல் பகுதிகளில் எண்ணெய் எடுக்க அனுமதி.

 காஷ்மீரில் தீவிரவாதிகளால் உயிர் நீத்தவர்களுக்கு திருவண்ணாமலை காங்கிரஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

 புதுக்கோட்டையில் புதியதாக புதுவை முத்தமிழ் சங்கம் அமைப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 மூத்த வக்கீல்களுக்கு முதல்வர் ஸ்டாலின் செங்கோல் வழங்கிய பாராட்டினார்.

 சீர்காழியில் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்களால் கட்டப்பட்ட புதிய நுழைவாயில் திறக்கப்பட்டது.

 நாகர்கோவிலில் கவிதையலாயா நாட்டிய பள்ளி விழாவில் பரதநாட்டிய அரங்கேற்றம் மற்றும் சலங்கை அணிவிழா நடந்தது இதில் மாணவிகளின் கண் கவர் பரதநாட்டியம் இடம்பெற்றன.

 கேரளா முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.

 பூந்தமல்லி போரூர் இடையே வெற்றிகரமாக நடைபெற்ற மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்.

 நல்லெண்ணெய் மனிதர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.

 பஹல் காம் தாக்குதல் தொடர்பான தலைவர்களின் கருத்திலிருந்து கட்சி விலகி நிற்கிறது.

 ஸ்பெயின் போர்ச்சுக்களில் மிகப்பெரிய அளவில் மின்தடை முக்கிய சேவைகள் பாதிப்பு.

 மேலப்பாளையம் மண்டல பகுதிகளில் மேயர் நேரில் ஆய்வு.

 இபிஎஸ் இன் அரசியல் பாதாள வீழ்ச்சிக்கு கவுண்டவுன் ஸ்டார்ட் ஆர் எஸ் பாரதி அறிக்கை.

 ஆந்திராவில் இருந்து எம்பி ஆக தேர்வு செய்யப்படாத அண்ணாமலை.

 போலீஸ் அதிகாரியை அடிக்கவேண்டும் என்று மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கர்நாடகா முதலமைச்சர் சீதாராமமையா.

 ஈரோடு அருகே மர்ம விலங்கு கடித்து ஐந்து ஆடுகள் பலி விவசாயிகள் பீதி.

 ஓ டி டி தளங்களில் ஆபாசங்களை கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்.

 ஆந்திராவில் செம்மர கடத்தல் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3பேர் உட்பட 7 பேர் கைது.

 சமையலறை ஸ்பெஷல் பப்பாளிக்காயில் சமையல் வகைகள்.

 கருப்பு அரிசி முருங்கை கீரை கொழுக்கட்டை.

 சமையலறையில் வைக்க கூடாத ஐந்து பொருட்கள் கட்டுரை அருமை. புற்றுநோய் ஏற்படுத்தும் சமையல் எண்ணெய்.

 மதுரை சிம்மக்கல் முதியோர் இல்லத்தில் சமூக ஆர்வலர் நூருல்லா மற்றும் ஷேக் மஸ்தான் ஊன்று கோல் வழக்கிறார்கள்.

 தஞ்சை தமிழ் மன்றம் மற்றும் ஜே சி ஐ இரண்டும் இணைந்து மேடையில் பேசுவது எப்படி என்ற ஒரு நாள் பயிற்சி வலங்கைமானில் நடந்தது.

 மதுரையில் தின முல்லை விருது சமூக சேவைக்காக சமூக ஆர்வலர் ரகுமான் டிவி வழங்கப்பட்டது.

 திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் குறை திரு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவ சௌந்தரவல்லி தலையில் நடைபெற்றது.

 நாட்டின் நலன்களைக் காக்க தயார் நிலையில் இருக்கிறோம் இந்திய கடற்படை அறிவிப்பு.

 உத்தரப்பிரதேசத்தில் நீதிபதி ஒருவரை தீர்ப்பு எழுத தகுதி இல்லை எனக் கூறி அலகாபாத் உயர்நீதிமன்றம் மீண்டும் அவரை பயிற்சிக்கு அனுப்பி வைத்த வினோதமான சம்பவம் அரங்கேறி உள்ளது.

 புதிய என் சி இ ஆர் டி புத்தகங்களில் முகலாயர்கள் டெல்லி சுல்தான்கள் படங்கள் நீக்கம் அப்துல் கலாம் படம் சேர்ப்பு.

 35 வயதாகியும் திருமணமாகவில்லை மனவேதனையில் ஐடி ஊழியர் எடுத்த விபரீத முடிவு.

 பாகிஸ்தானின் 16 youtube சேனல்களுக்கு இந்தியா தடை.

 கண்ணகி முருகேசன் ஆணவக் கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட்.

 பாஜக பாமக இருக்கும் அணியில் விசிக இடம்பெறாது திருமாவளவன் திட்டவட்டம்.

 புதுச்சேரி லாஸ்பேட்டை அசோக் நகரை சேர்ந்த பெண் நிர்வாண படத்தை இணையதளத்தில் வெளியிடுவதாக கூறி ஒரு லட்சம் பறிப்பு.

 டெல்லியில் வசிக்கும் 5 ஆயிரம் பாகிஸ்தானியர்கள் காவல் துறைக்கு பட்டியலளித்த உளவுத்துறை.

 பொது வைஃபை பயன்படுத்தும் போது ஆன்லைன் பணப்பரிசுகளை செய்ய வேண்டாம் மத்திய அரசு எச்சரிக்கை.

 எல்லையில் 4 நாளாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் இந்தியா பதிலடி.

 whatsapp தளங்களில் ராணுவத்திற்கு நன்கொடை வசலிப்பா மத்திய அரசு மறுப்பு.

 இந்தியா உடனான வர்த்தக முறிவால் பாகிஸ்தானில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு அபாயம்.

 கன்டா திருவிழாவில் பங்கேற்றவர்கள் மீது கார் தாறுமாறாக மோதியதில் ஒன்பது பேர் உயிரிழப்பு.

 ஈரான் துறைமுக வெடி விபத்து மேலும் உயர்ந்த பலி எண்ணிக்கை.

 போப் பிரான்சிஸ் கல்லறையை மக்கள் பார்வையிட அனுமதி.

 இன்றைய புதிய கவிதைகள் ஜோக்ஸ் அனைத்தும் சிறப்பாக உள்ளது.

 இந்த நாளிதழை காலையில் கிடைக்க அயராது பாடுபடும் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் நன்றி.

 தொடரட்டும் உங்கள் சேவை கிடைக்கட்டும் நாளிதழ் தினம் அதிகாலை.



-அபிபுல்லாகான். க

போளூர்