அன்புடையீர்
வணக்கம் 1.4.25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர்.காம் முதல் பக்கத்தில் கோடை வெயில் ஒட்டி பறவைகளுக்கு நீரும் உணவும் கொடை அளிப்போம் என்று நம் தமிழக முதல்வரின் பேச்சு மிகவும் பயனுள்ளது. அது போல் ஐந்தறிவுள்ள அந்த பறவைகளுக்கு நீரும் உணவும் கொடுப்பது நம்முடைய கடமை. இன்றைய பஞ்சாங்கம் மிக அருமையாக இன்றைய நாளை எனக்கு அழகாக தொகுத்து சொன்னது. தமிழக முழுவதும் ரமலான் நோன்பு மிக அருமையாக கொண்டாடப்பட்ட படமும் செய்தி மனதுக்கு மகிழ்ச்சியாக படிக்க முடிந்தது. இன்றைய திருக்குறள் மிகவும் அருமை படிக்கும் போது அதன் பொருளும் அந்த குறளின் நிறைவும் மனதுக்குள் வந்து பரவசப்படுத்துவது உண்மை. அந்த பக்கத்தில் உள்ள அனைத்து கோவில் செய்திகளும் மிகவும் அருமையாக ஆவலுடன் படத்துடன் பார்த்து படிக்க வைக்கிறது. இன்றைய நலம் தரும் மருத்துவம் பகுதியில் ஆரஞ்சு பழத்தில் உள்ள சத்துக்களும் பயன்களும் என்று நல்ல அருமையான செய்தியை சொல்லி ஆரஞ்சு பழத்தின் மீது நாட்டம் கொள்ள வைத்த தமிழ்நாடு இ பேப்பருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். மாதந்தோறும் மின் கணக்கீடு திட்டம் வரும் விரைவில் என்ற செய்தி மகிழ்ச்சியாக இருந்தது. தினம் ஒரு தலைவர் பகுதியில் வி கல்யாண சுந்தரனார் அவர்களின் வரலாறும் அவரைப் பற்றிய செய்தியும் நல்ல தகவலாக எண்ணி படிக்க வைத்தது மனம் நிறைந்த பாராட்டுக்கள். பல் சுவை களஞ்சியம் பகுதி மிகவும் அருமை அதில் வந்த பிள்ளைகளின் விருப்பம் அறிவோம் என்ற செய்தி மனதை நெகிழ வைத்தது. இதை படிக்கும் பெற்றோர்கள் கண்டிப்பாக பிள்ளைகளின் விருப்பங்களுக்கு மரியாதை கொடுத்து அதை பயன்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று எண்ண வைத்தது. சமையலறை ஸ்பெஷல் மிகவும் அருமை. தக்காளியின் மருத்துவ பயன்கள் நல்ல செய்தியாக ஆவலுடன் படிக்க வைத்தது. பிறந்தநாள் விழாவில் நடந்த சுவாரஸ்யம் என்று தன்னுடைய கொள்ளு பேரனுக்காக தாலாட்டு பாடிய ராமதாஸ் பற்றிய செய்தியும் படமும் அந்த குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வைத்தது. வேலை வாய்ப்பு கார்னர் மிகவும் அருமை. நல்ல செய்திகளை கொடுப்பதால் வேலையில்லாதவர்கள் அதை பார்த்து விண்ணப்பித்து வேலையில் சேர நல்ல வாய்ப்பு கிடைப்பது உண்மை. மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் மசூதியில் குண்டுவெடிப்பு என்ற செய்தி அதிர்ச்சியுடன் படிக்க வைத்தது. அமெரிக்க பெண் ரூபாய் ஆயிரம் வாங்கிய ஓவியம் கோடிக்கணக்கில் ஏலம் போக வாய்ப்பு என்ற செய்தி அமெரிக்காவில் நடப்பதை ஆவலுடன் தெரிந்து கொள்ள முடிந்தது உலக செய்திகளை அழகாக தொகுத்துக் கொடுத்து புதிய விடியலை புத்துணர்வு தரும் விடியலாக மாற்றும் தமிழ்நாடு இ பேப்பர் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
நன்றி
-உஷா முத்துராமன்