tamilnadu epaper

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்)-07.05.25

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்)-07.05.25


அன்புடையீர்,


வணக்கம். 7/5/25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர் முதல் பக்கத்தில் இனி இந்தியாவின் தண்ணீர் இந்தியாவுக்கே என்ற பிரதமர் மோடிஜி அவர்களின் கருத்தை ஆமோதித்தேன். இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இரண்டு நாள் போர் பயிற்சி நடத்தும் இந்திய விமானப்படை என்பது பயத்துடன் படிக்க வைத்த தகவல். இன்றைய பஞ்சாங்கம் மிக அற்புத நாளாக எனக்கு அமைந்தது.


திருக்குறள் பொருளுடன் படித்த போது மகிழ்ச்சியாக இருந்தது. அருமையான திருக்குறளும் பொருளும் கொடுத்த தமிழ் நாடு இ பேப்பருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் 6- வது நாளாக சித்திரை பிரம்மோற்சவம் என்ற படமும் செய்தியும் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் மனதுக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது.


நலம் தரும் மருத்துவம் பகுதியில் காய்கள் கனிகள் இதை சாப்பிட்டால் என்ன நலம் வருமா அதைப்பற்றி சொன்னதுடன் இப்போது நாம் உடலில் ஆரோக்கியமாக இருக்க காய்ச்சல் வந்தால் ஆன்டிபயாட்டிக் எடுக்கலாமா என்று பல நல்லவித தகவல்களை சொல்லும் பகுதியாக மிகவும் ஆர்வமுடன் பாதுகாத்து படிக்க வேண்டிய செய்தி அது. வண்டலூரில் இன்ஜினியரிங் கல்லூரியில் டிரைவர் வெட்டிக்கொலை என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது எப்போதும் கொலை என்றும் இறந்து விட்டார்கள் என்ற செய்தியும் நம் மனதை வேதனையில் ஆழ்த்துவது உண்மை.


மெட்ரோ ரயில் சேவையை மேம்படுத்த பொது மக்களிடம் கருத்து கேட்கும் சி எம் ஆர் எல் மிகவும் அருமையான தகவல். இதனால் அவர்கள் தங்களுடைய சேவையை பயணிகளுக்கு ஏற்றது போல் கொடுக்க வசதியாக இருக்கும். சிங்கப்பூர் நாடாளுமன்ற தேர்தலில் கடையநல்லூர் மருத்துவர் வெற்றி என்ற செய்தி பாராட்ட வைத்தது .


தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் வரலாறும் அவரைப் பற்றிய வரலாற்று தகவல்களும் மிகவும் அருமை.


பல்சுவை களைஞ்சியம் பகுதியில் வந்த மாறிப்போன உறவுகள் இன்றைய உறவுகளைப் பற்றிய யதார்த்தமான நிலை மிக அழகாக சொன்னது. மீம்ஸ் ஜோக்ஸ் விடுகதை எல்லாமே சூப்பரோ சூப்பர் பாராட்டுக்கள் .


ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வசந்த உற்சவம் என்ற செய்தியும் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் சித்திரை திரு விழாவில் புஷ்ப பல்லாக்கு விழா என்ற செய்தியும் ஸ்ரீ பட்டாளம்மன் கோவிலில் சித்திரை தேர் திருவிழா என்று அனைத்து ஆன்மீக செய்திகளும் அருமை. இப்போது இருக்கும் கோடையில் எந்த கோவிலுக்கும் சென்று கடவுளை தரிசிக்க முடியவில்லை என்ற ஏக்கத்தினை போக்க எல்லா ஊர்களிலும் நடக்கும் தேர் ஊர்வலங்களை மிக அழகாக பிரசுரிப்பது மிகவும் அருமை பாராட்டுக்கள்.


டெல்லி செங்கோட்டைக்கு உரிமை கோரி பெண் தாக்கல் செய்த மனு தள்ளுபடி என்று வடக்கே நடக்கும் செய்தியை மிக அழகாக சொன்னது அங்கே சென்று நேரில் பார்ப்பது போல இருந்தது .மரபணு திருத்தப்பட்ட இரண்டு நெல் ரகம் என்று மத்திய அமைச்சர் சவுகான் அறிமுகம் செய்தது நல்ல தகவல்.


கேரளம் வெறி நாய் கடித்து 7 வயது சிறுமி பலி என்ற செய்தி வேதனையாக இருந்தது க்ரைம் கர்னர் விழிப்புணர்வுடன் நடக்க உதவியது.


தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ரஷ்யாவும் ஜப்பானும் ஆதரவு தருவது நல்ல செய்தி. ராஜஸ்தானில் ரூபாய் 20 லட்சம் லஞ்சம் வாங்கிய எம்எல்ஏ கைது செய்தது நல்ல முடிவு.


காசாவை முழுமையாக கைப்பற்ற திட்டம் என்ற இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் செய்ததை பார்த்ததும் போர் தீவிரம் காதுகளில் ஒலித்து பய உணர்வை ஏற்படுத்தியது.


ஒவ்வொரு பக்கத்திலும் அருமையான செய்திகள் மிகத் தெளிவாகவும் படங்களுடனும் பிரசூரித்து விடியல் பொழுதை விக்னம் இல்லாமல் தொடங்க உதவும் தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.


 நன்றி 

உஷா முத்துராமன்