tamilnadu epaper

வாசகர் கடிதம் (கா.ந.கல்யாணசுந்தரம்)-08.04.25

வாசகர் கடிதம்  (கா.ந.கல்யாணசுந்தரம்)-08.04.25


தமிழ்நாடு இ.பேப்பர் இணைய நாளிதழாக நாளும் மலர்கிறது. பல்வேறு சிறப்பம்சங்கள் பொருந்திய நாளிதழ் என்றால் இதற்கு இணையில்லை எனலாம். தமிழ் இலக்கியத்துக்கு பேராதரவு நல்கும் ஆசிரியர் மற்றும் குழுவினருக்கு மனமார்ந்த நன்றி. நாள்தோறும் புதுக்கவிதை பகுதியில் மூத்த தமிழ் அறிஞர்களின் கவிதைகள் முதல் வளரும் இளைய கவிஞர்களின் கவிதைகள் வரை மிகச் சிறப்பாக வெளியிடுவதில் இந்த நாளிதழ் சிறப்புக்கு உரியதாக விளங்குகிறது. நூல்வெளியீடுகள், இலக்கிய நிகழ்வுகள் என பல்வேறு நிகழ்வுகளை உடனுக்குடன் வெளியிட்டு தனித்துவமாய் விளங்குகிறது. ஒவ்வொரு பக்கங்களிலும் சிறப்பம்சங்கள். ஆன்மிகம், கலை, இலக்கியம், அரசியல் செய்திகள், உலகச் செய்திகள், திரைச் செய்திகள், சிறுவர்களுக்கான பக்கங்கள்…அடடா….நாளிதழ் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும். தினமும் அதிகாலையில் எழுந்தவுடன் தமிழ்நாடு இ.பேப்பரை படித்துவிட்டுதான் தேநீர் அருந்துவேன். 


தன்னிகரில்லா சேவையில் 

தமிழ்நாடு இ.பேப்பர் 

வாழ்த்துகிறேன் 



–கா.ந.கல்யாணசுந்தரம், 

சென்னை - 600100.