tamilnadu epaper

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு)-07.05.25

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு)-07.05.25


  'கல்லுக்குள் ஈரம்' என்ற சீர்காழி ஆர். சீதாராமனின் கதை இப்படியும் சில மனிதர்கள் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டியது. சிலர் இப்படிதான் தொழிலில் மிக கறாராக இருப்பார்கள். ஆனால் நல்ல காரியம் என்று வந்தால் தாராளமாக செய்வார்கள்!


  அறியாப் பருவத்தில் குழந்தைகளுக்கு எப்படி சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும், குழந்தைகளும் எப்படி எச்சரிக்கையாக சிந்தித்து நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை சுமதி முருகனின் 'அறியாப் பருவம்' என்ற சிறுகதை உணர்த்தியது.


  கே.ஆனந்தனின் 'அவதாரம்' தொடர்கதை ஒருவித கிராமிய அழகுடன் மனதைக் கொள்ளையடிக்கிறது. செல்வியின் கெட்டிக்காரத்தனத்தை பார்க்கும்போது, அவள் எந்த ஆபத்து வந்தாலும் அதை வென்று வீரத்துடன் நிற்பாள் என்று தோன்றுகிறது.


  முக்குலத்தோர் சமூக மக்கள் ஒரு தெய்வமாக வணங்கும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வரலாறும், சிறப்பாகவும் இருந்தது.


 'மாறிப்போன உறவுகள்' கட்டுரை அந்த காலத்தில் சொந்தம் பந்தம் உறவு எப்படியிருந்தது, இந்த காலத்தில் எப்படியிருக்கிறது என்பதை நகைச்சுவையாக சொன்னாலும், இதுதான் உண்மை!


  இராம. வேதநாயகத்தின் பட்டம், தோசை என்ற இரண்டு சிறுவர் பாடல்களும் குழந்தைகள் குதூகலமாக வாய்விட்டுப் பாடும்படி இருக்கிறது.


  'வாழையடி வாழை...' என்ற உமாதேவி பலராமன் வாழையின் சிறப்பை சுருக்கமாக சொல்லியிருந்தாலும் சுவையாக சொல்லியிருக்கிறார். தமிழ்நாடு இ.பேப்பரில் செய்திகள்,கதைகள், கட்டுரைகள், கவிதைகள், துணுக்குககள் எல்லாமே தரமாக மனதைக் கவரும்படி இருப்பதை பாராட்டுகிறேன்.



-சின்னஞ்சிறுகோபு,

  சிகாகோ.