இப்போதெல்லாம் அலாரம் வைக்க
வேண்டிய அவசியம் இல்லை
ஏனென்றால் அந்த நேரத்தில்
தமிழ்நாடு இ பேப்பர் மெசேஜ்
நம்மளை எழுப்பி விடுகிறது
காலை பொழுது இனிமையாக
கழிகிறது. கோழி கூவுது கூட
சில சமயம் தோற்றுவிடும்
நாள்தோறும் நம்மை எழுப்புவதில்
தமிழ்நாடு இ பேப்பர் முன்னோடியாக
திகழ்கிறது. நாடு முழுவதும்
23 லட்சம் பேர் நீட் தேர்வு
எழுதினார்கள் தமிழகத்தில் மட்டும்
ஒன்றரை லட்சம் பேர் நீட் தேர்வு
எழுதினார்கள். சாராயம் காய்ச்சிய
தந்தை மகன் கைது அவர்களுக்கு
வேறு வேலை கொடுத்தால்
ஏன் சாராயம் காய்ச்ச போகிறார்கள்
மும்பை டு அகமதாபாத் புல்லட் ரயில்
கட்டுமான பணிகள் வேகமாக
நடந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது
நெல்லை குரலோன் எழுதிய
கவிதை நல்ல விழிப்புணர்வு
கவிதையாகும். ராஜா சிங்
ஜெயக்குமார் அவர்கள் எழுதிய
நியாயம் கேட்கும் கண்ணீர்
என்ற கவிதை நிதர்சனமான உண்மை
உத்தரபரதேசத்தில்
எட்டு பேர் கொண்ட முஸ்லிம்
குடும்பத்தினர் இந்துவாக மதம் மாறி
உள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பு
அளிக்க வேண்டியது அரசின் கடமை
பாகிஸ்தான் பெண்ணை மணந்த
சி ஆர் பி எப் வீரர் பணி நீக்கம்
இதில் விசேஷம் என்னவென்றால்
அவர் உயர் அதிகாரியிடம்
ஒப்புதல் பெற்று தான் பாகிஸ்தான்
பெண்ணை மணமுடித்தார்.
உக்ரைன் போரில்புதின் இரக்கமின்றி
நடந்து கொள்கிறார். உக்ரைன்
நாட்டில் இருந்து கைதாகி வரும்
நபர்களை மிகுந்த சித்திரவதை
செய்கிறார்கள். உலகத்
தலைவர்களின் உயிருக்கு
உத்தரவாதம் தர முடியாது என
உக்ரைன் அதிபர் கூறி இருக்கிறார்
சிந்து நதியை தடுக்கும்
கட்டமைப்பின் மீது தாக்குதல்
நடத்துவோம் என பாகிஸ்தான்
கூறி இருக்கிறது. மாம்பழத்தின்
பயன்கள் அளப்பரியது. கட்டுரை
பிரமாதம். கம்ப்யூட்டர் எப்படி
பயன்படுத்த வேண்டும் நாம்
எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்
என்ற கட்டுரை இளைஞர்களுக்கு
பயனுள்ளதாக அமைந்துள்ளது
ஒடிசாவில் இருந்து கொண்டு
நாட்டு நடப்புகளையும் உலக
நடப்புகளையும் உள்ளூர்
செய்திகளையும் சுடச்சுட தருவதில்
தமிழ்நாடு இ பேப்பருக்கு
இணை இல்லை உங்கள் டீமுக்கு
ஒரு ராயல் சல்யூட்
-நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி