tamilnadu epaper

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா)-07.05.25

வாசகர் கடிதம்  (நடேஷ் கன்னா)-07.05.25


காலையில் எழுந்ததும் எங்கள் 


வீட்டு வாண்டுகள் என் மொபைலை 


வாங்கி தமிழ்நாடு இ பேப்பர் 


வாட்ஸ் அப்பை ஆன் செய்து 


முதலில் அவர்கள் தான் சிறுவர் 


உலகம் ரவுசு மணி இதை 


பார்த்துவிட்டு என்னிடம் 


 கொடுப்பார்கள் நான் அதன் பின்பு 


வீட்டு பெரியவர்களுக்கு ஆன்மீகம் 


ஆன்மீக செய்திகள் உடல்நலம் 


போன்றவற்றை அவர்களுக்கு 


வாசித்துக் காட்ட வேண்டும் 


அதற்கு அப்புறம் தான் நான் 


 மொபைலை பார்க்க முடியும் 


சரி இனி விஷயத்துக்கு வருவோம் 


இனி இந்தியாவின் தண்ணீர் 


இந்தியாவுக்கே என மோடி 


கூறியிருப்பது ஒரு வகையில் 


நன்மையாக இருந்தாலும் 


சுயநலமும் கலந்து உள்ளது.


ஏழாவது முறையாக திமுக ஆட்சி 


அமைக்கும் என ஸ்டாலின் 


கூறியிருப்பது அசைக்க முடியாத 


நம்பிக்கை. ஆண்டிபயாட்டிக் 


மாத்திரைகளை டாக்டர் பரிந்துரை 


இல்லாமல் வாங்குவது தவறான 


செயலாகும். விஜய்க்கு சால்வை 


அணிவித்த தொண்டரை அவரது 


பாதுகாவலர் துப்பாக்கியால் 


மிரட்டியதை பார்க்கும் பது


இப்போதே இந்த கெடுபிடி என்றால் 


அவர் முதல்வராகி விட்டால் 


நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக 


உள்ளது. பாஜகவில் இருந்து 


எனக்கு அழைப்பு வந்தது என 


திருமாவளவன் கூறியிருப்பது 


ஒருவேளை திமுக கழற்றி விட்டால் 


அங்கு துண்டு போட நினைக்கிறார் 



சின்னஞ்சிறு கோபுவின் வாழைப்பூ 


வடை கவிதை நல்ல நகைச்சுவை 



ரிஷி வந்தியா சாரின் கவிதை 


சரியான சாட்டையடி. ராணுவ 


நடவடிக்கை மூலம் காஷ்மீர் 


ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க 


இந்தியா திட்டம் வகுத்துள்ளது. 



ராஜஸ்தானில் 20 லட்சம் லஞ்சம் 


வாங்கிய எம்எல்ஏ வை லஞ்ச ஒழிப்பு 


போலீசார் கைது செய்தனர் 



காசாவை முழுமையாக கைப்பற்ற 


இஸ்ரேல் திட்டம் தினமும் பலவித 


பல்சுவை நிகழ்ச்சிகளுடன் 


அலங்காரமாக காட்சி அளிக்கிறது 


தமிழ்நாடு இ பேப்பர் வாழ்த்துக்கள்



-நடேஷ் கன்னா

கல்லிடைக்குறிச்சி